பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ - 聖書傍 அதிர்ஷ்டம் அப்படி இருக்கு என்று சொல்லி, லேசாகச் சிரித்தாள். - என் அதிர்ஷ்டம்தானே என்னவோ! என்று அவன் நினைத்தான், சொல்லவில்லை. நீங்கள் விரும்பினுல், என் வண்டியில் வரலாம். எங்கு போகவேண்டுமோ, அங்கேயே கொண்டுபோய்ச் சேர்த்து விடுகிறேன்’ என்று குழைவாகப் பேசிஞன் அவன். வீட்டுக்குத்தான் போகனும். வழியில், மெக்கானிக் ஒருவனிடம் தெரிவித்துவிட்டுப் போகணும்-ஆள் அனுப்பிக் காரைக் கவனிக்கும்படி என்று இழுத்தாள் அவள். சரி. ஏறுங்கள் என்ருன் மாதவன். அவள் அவனது சாரட்டில் ஏறி உட்கார்ந்த பிறகு அவனும் அமர்ந்துகொண்டான். வண்டி கிளம்பியது. மாதவனின் உள்ளம் உல்லாசச் சிறகுகள் பெற்று ஆனந்த வானிலே சஞ்சரித்தது. அவள் உள்ளம்கூட குதுாகலிப்புடன் மிதந்துகொண்டிருந்தது. அவள் முகம் , முந்திய கவலையைத் துறந்துவிட்டு, அளவிலா மகிழ்ச்சியால் நன்கு சோபித்தது. - உங்களைப்பற்றி நான் அறிந்துகொள்ளலாமோ?’ என்று வினவிஞன் அவன். 'களுக்கு'ச் சிரிப்பு உதிர்த்தாள் அவள், என் பெயர் ஜெவந்தி என்ருள். அவள் வீடு இருக்கும் இடம்பற்றி அறிவித்தாள். சொந்த விஷயமாக அ :ள் காரில் தனியாகக் கிளம்பி வந்தாள்; எதிர்பாராதவிதமாக காருக்குக் கோளாறு ஏற்பட்டுவிட்டது. மாதவன் வராதிருந்தால் அவள் இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே வெயிலில் கருகிக்கொண்டு நிற்க வேண்டுமோ! அவள் இவ்விஷயங்களைச் சொல்லி முடிப்பதற் குள் எத்தனையோ தடவைகள் சிரித்துவிட்டாள்.

  • சிரிக்காமல் இருக்கமுடியாதுபோலும் இவளால்!" என்று முனங்கியது அவன் மனம்.