பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ -- ‘翼墨擎 அவன் எவ்வளவோ மறுத்தும் அவள் கேட்கத் தயாராக இல்லை. வெளியே போய் சாரதியிடம் சாரட்டை ஒட்டிக் கொண்டு போகும்படியும், மாலை ஐந்து-ஐந்தரை மணிக்கு வரும்படியும் அவளே அறிவித்துவிட்டாள். வண்டி போன் பிறகு, அவள் உள்ளே சென்று சமையல்காரிக்குச் சில உத்திர விட்டாள். ஒவலும் கொண்டு தந்தாள். உங்கள் உபசரிப்பு ரொம்ப பலமாக இருக்குதே!’ என்ருன் அவன் , சிறு சிரிப்புடன். அவள் சிரித்தாள். அவள் கண்கள் பேசத் தொடங்கின. மாதவன் பார்வை சுவர்மீதெல்லாம் மேய்ந்தது. சில போட்டோக்கள் தொங்கின. அங்கு அவற்றில் சில முன்பு கார் ஒட்டிவந்த உல்லாசியை-மாத வனே ப் பழித்த ஆசாமியை-நினைவுபடுத்தின. வீட்டை நன்ருகப் பாருங்கள்! என்று அவள் அவனுக்கு ஒவ்வொரு அறையையும் காட்டினுள். அலங்காரப் பொருள் களும், ஆடம்பரச் சாமான்களும் தாராளமாகவே தென் பட்டன அறைதோறும். மாடிக்குப் போகலாம், வாங்க என அவள் அவனுக்கு வழிகாட்டினுள். மாடி அறைகளும் ஜோராகத்தான் இருந்தன. ஒரு இடத்தில் அவனுக்கு அறிமுகமாகியிருந்த நபரின் பெரிய படம் ஒன்று எடுப்பாக விளங்கியது. இவர்தான் உங்கள் கணவரா? என்று விசாரித்தான் மாதவன். அப்படியும் சொல்லலாம் என்று புன்னகையோடு கூறினுள் ஜெவந்தி. அவன் விழித்தான், அவள் சிரிப்பு அதிகமாயிற்று. எனக்குப் புரியவில்லை என்ருன் அவன். இவள் அவனுடைய காமினியாக இருக்கலாம் என முதன் முதலிலேயே தான் சந்தேகித்தது மாதவனுக்கு நினைவு வந்தது; அவ்விஷயத்தை அவன் அப்படியே விட்டுவிட்டான்.