பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

剑 மன்னிக்கத் தெரியாதவர் அவள் மாணவி ஆக மாறியதுமே, அவளுடைய நடை உடை பாவனே பேச்சு எல்லாமே மாறுதல் பெற்றுவிட்டன. சுந்தரம் சின்னப் பிள்ளையாக, விளையாட்டுத்தனம் பெற்ற வளாப் நடந்துகொள்ள மு. யன் ரு ள். அவள் பேச்சில் ஒன்றும் தெரியாத குழந்தை'போல் நடிக்க முயல்வது தொனித்தது. அவள் குதித்துக் குதித்து நடை போடுகிற போது ஸ்கிப்பிங் ஆடுகிற குறும்புக்காரப் பெண்ணின் நடிப்பு மிளிரும். நீட்டி நீட்டிப் பேசும்போது, பள்ளிக் கூடத்திலே ஆளு-ஆளு, ஆவேன்ன, ஈளு-ஈனு, ஈயேன்ன’ என்று இழுக்கும் ராகமும், ஒரோண் ஒண்ணு, ஒண்னும் ஒண்னும் ரெண்டு என்று நீட்டும் வாய்ப்பாட்டு ராக'மும் தோனிக்கும். பிறர் குறை கூறும்போது, 'இதெல்லாம் குற்றமா?" என்று கேட்டாள் அவள். குற்றம் இல்லே அம்மா! ஆல்ை, வயசு, நிலைமை, பண்பு இவற்றுக்கு ஏற்றதாயில்லேயே உன் போக்கு எலும் உண்மையை யாரும் எடுத்துச் சொல்லவில்லை அவளுக்கு. பொது அறிவை ஒரு வரி அதிகமாக்கிவிட்டு வெளியே வந்தாள் சுந்தரம். உடனே வாய்ப்பாட்டுக் குரலெடுத்துக் கூவினுள் 'மதனீ. . . மதனி... மதனியோய் மருமகனெல்லாம் வந்தாச்சு: மருமகனெல்லாம் வந்தாச்சு!" அவளுக்கு யாரும் கவனிப்புக் கொடுக்கவில்லை. வெளியே இருந்து வந்த மருமகன்கள் அவர்கள் பாட்டுக்குப் புத்தகங் களே உரிய இடத்தில் வைக்கப்டோனர்கள். உள்ளே இருந்த மதனி காப்பி ஆற்றும் அலுவலில் ஈடுபட்டிருந்தாள். சுந்தரம் பாண்டி விளையாட்டு ஆடுவதுபோல் வீட்டுத் தளவரிசைச் செங்கல்லில் தாவித் தாவிக் குதித்தபடி உள்ளே போளுள். மருமகன்லாம் வந்தாச்சு மதனி என்ருள். "சரி! வரட்டுமே என்ற அகிலாண்டம், நீயும் காப்பி குடியேன், சுந்தரம் என்று உபசரித்தாள்.