பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 夏要葛 அநேகமாக அவற்றில் அனைத்தையும் ஈடுபடுத்தி வெற்றி கரமாக முன்னுக்கு வந்தவர் சிந்தனைச் சூரியன் பரப் பிரம்மம் பி. ஏ. கலாசாரக் கழகம்' என்ற அமைப்பின் தனிப் பெரும் தலைவர் அவர். கட்சிகள் மலிந்த இந்த நாட்டில் தானும் ஒரு கட்சி அமைத்து, தான் வாழ்வதோடு தன்னை நம்பிவரும் சிலரையும் வாழவைக்க ஆசைப்பட்டார் அவர். தனது கட்சியையும் கட்சி' என்று சொன்னல், பத்தோடு பதினுெண்ணு; அத்தோடு இதுவுமொண்ணு, என்று மற்றவர் கள் ஒதுக்கிவிடுவார்கள் என்ற அச்சம் அவருக்கு எழுந்தது. ஆகவே அவர் நமது கலாசாரக் கழகம் ஒரு கட்சி அல்ல: ஒற்றைத் தனி அமைப்பு’ என்று சந்தர்ப்பங்களிலும் அசந்தர்ப்பங்களிலும் நாப்பறை அறைந்து வந்தார். அமைப்பு என்ருல் என்ன என்று கேட்டால் ஸ்தாபனம்" என்றும், ஸ்தாபனம்' பற்றி விளக்கம் கோருகிறவர்களிடம் ‘அமைப்பு என்று எடுத்துச் சொல்லியும் மிரட்டி வந்தார் அவர். - வாய்வீச்சு வல்லவர்களும், சொல் புரட்டர்களும் மற்ற வர்களின் அறியாமையை மூலதனமாக்கி, கட்சியை வியாபார அமைப்பாக மாற்றி, தங்கள் சொந்த வாழ்க்கையை வெற்றிகரமானதாக வளர்த்துக் கொள்வதற்கு ஏற்ற சூழ்நிலை நீடிக்கிற இந்த நாட்டிலே, பரப்பிரம்மம் பி. ஏ. ஒரு சில வருஷங்களில் உயர முடிந்தது ஆச்சர்யமில்லைதான். ஆரம்பத்தில் வாரத்தாள்’ ஒன்றிலே உதவி ஆசிரிய ராகப் பணிபுரிந்தார் அவர். தமிழ் நாட்டில் பத்திரிகையின் உதவி ஆசிரியருக்கும் ஒரு புரூப் ரீட'ருக்கும் வித்தியாசம் எதுவும் கிடையாது என்பதையும் உ. ஆ. வேறு பல அலுவல்களையும் கவனித்தாக வேண்டிய அந்தஸ்து பெற்றவர் என்பதையும் அவர் அனுபவபூர்வமாகக் கற்றுக்கொண்டார். இரண்டரை வருடகால அனுபவ ஞானம் அவருக்கு இன்னும் எவ்வளவோ உண்மைகளைக் கற்றுக் கொடுத்தது. * , , எழுதிப் பிழைக்கத் துணிகிறவனைவிட பேசிப் பிழைக்க முன்வருகிறவன் வெற்றிகரமாக வாழமுடியும், சுலபப் பெயர் பெறமுடியும், எளிதில் பணம் பண்ணவும் கூடும் என அறிந்