பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五盔器 மன்னிக்கத் தெரியாதவர் தார் அவர். பலரைப் புகழ்ந்தும். சிலரை காக்கா பிடித்தும், உரிய முறைப்படி கம்பி இழுத்தும் (வயர்-புல்லிங்), பெருந்தலைகளின் முதுகைச் சொறிந்தும், தேவைப்பட்ட சமயத்தில் பலன் தரக்கூடிய இடங்களில் சாமர்த்தியமாகக் காது குத்தி'யும், தனக்கெனத் தனி இடம் பிடித்தார். அதை அஸ்திவாரமாக்கி மேலும் மேலும் முன்னேறுவதற்கு ஏற்ற வழி தனிக்கட்சி அமைப்பதுதான் என்று உணர்ந்தார் அவர், உடனடியாக அமைத்தும் தீர்த்தார். மக்களின் நற்பண்புகளைப் போற்றி வளர்ப்பது சிரமம்; நல்லவர்களாக வாழவைக்க வழிகாட்டுவதன்மூலம் ஏகப் பட்டவர்களை ஒன்று கூட்ட முடியாதி: நல்லுபதேசங்கள் மிகக் குறைந்த சீடர்களையே சேர்த்துத் தரும்; ஆல்ை, மக் களின் வெறுப்பை வளர்ப்பதன் மூலம்-வெறியைத் துண்டு வதஞல்- மிகப்பலரை ஒன்று திரட்டலாம். இதைப் புரிந்து இதாண்டார் பரப்பிரம்மம் பி. ஏ. எனவே, அவர் எல்லாவற் றையும் காரசாரமாகத் தாக்கினர். எல்லோரையும் குறை கூறிஞர். குறுகிய காலத்திற்குள் சிந்தனைச் சூரியன்’ என்ற பட்டமும் பெற்று விட்டார். . தமது அமைப்பு பலம் பெறவேண்டும். ஆதற்கு வெள்ளி கான்ட் தேவை. அன்பர்களே அள்ளித் தாருங்கள்!" என்று முழக்கம் செய்தார் வழிகாட்ட வந்தவர். அவர் பேச்சால் வசீகரிக்கப்பட்டவர்கள் ரூபாய் ரூபாயாக அனுப்பி வைத்தார்கள். நிதி வசூலிப்பது லாபகரமான தொழில் என அறிந்த தலைவர்' அவ்வப்போது எதன் பெயரையாவது சொல்லி நிதி இகட்டு, நாட்டை நோக்கி இரு கைகள் நீட்டும் வழக்கத்தை மேற்கொண்டார். வெற்றியும் கண்டார். - ஆசை மனிதனைச் சும்மா விட்டுவிடுமா? பேங்க் பேலன்ஸ்: பெருகவில்லையே இன்னும் என ஏங்கினர் சிந்தனைக் சூரியன். அவர் சிந்தனையில் அற்புத மின்வெட்டு பளிச்சிட்டது. தனது நாற்பத்து நாலாவது பிறந்தநாளை அமோகமாகக் கொண் டாடத் திட்டமிட்டார். அதற்கென ஒரு கமிட்டி பிறந்தது.