பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ Ãፉ? மாதவன் பெருமூச்செறிந்தான். இதர கடிதங்களைப் படித்துப் பார்க்க மனம் எழவில்லை அவனுக்கு. நாற்காலியில் அசைவற்றுச் சாய்ந்திருந்தான் அவன். சிறிது நேரத்துக்குப் பிறகு கை அன்றைய தினசரியை எடுத்தது. அவன் கண்கள் மேலோட்டமாகப் பத்திரிகையில் அங்கு மிங்கும் பாய்ந்தன. அந்தத் தத்துக்கிளிப் பார்வையில்கூட ஒரு செய்தி அவனைத் தாக்கி விட்டது. தனது ஊர் செய்தியாக இருக்கவே அவன் அதை வாசித் தான். அது இடி என அதிர்ச்சி தந்தது அவனுக்கு. -சங்கரலிங்கம் பிள்ளையின் மகளும், அம்பலவாணன் என்பவரின் மனைவியுமான காந்திமதி அடுப்பு பற்றவைக்கும் பொழுது அஜாக்கிரதையால் சேலையில் தீப்பிடித்துக்கொண் டது. அதன் காரணமாக அவள் உடலெல்லாம் புண்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகப்பட்டாள். அங்கேயே மரணம் அடைந்தாள். அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபத் தின் விளைவாக மரணம் சம்பவித்தது என்று பஞ்சாயத்தார் தீர்ப்புக் கூறினர். - மாதவன் அதை மறுமுறையும் வாசித்தான். விபத்தின் விளைவா? இல்லை. இல்லவே இல்லை. அது தற்கொலைதான்' என்று அவன் உள்ளம் அலறியது. காந்தி, கடைசியில் உன் கதி இப்படியா ஆகவேண்டும்?’ என்று புலம்பியது. "நான்தான் அவள் சாவுக்குக் காரணமோ? என்று எண்ணுமலிருக்க முடியவில்லை அவளுல். -முதல் தடவை நான் அவளே விட்டுப் பிரியும்போது, அவளுக்கு நல்லதுதான் எண்ணினேன். அப்பொழுது அவள் அழுது, மனவேதனை அனுபவித்தாள்... பிறரு தற்செயலாக சந்திக்க தேர்ந்தபோது என்னை மறந்துவிடும்படி சொன்னேன். அதுவும் அவள் நன்மையைக் கருதிச் சொன்னதுதான். ஆளுல் அதன் விளைவு பயங்கரமாகிவிட்டதே... மாதவன் பித்துப் பிடித்தவன்போல் உட்கார்ந்திருத் தான். அவன் உள்ளத்தின் துயரச்சுமை கன்த்தது. இதயமே வெடித்துவிடும்போல் உறுத்தியது. கண்களில் நீர் பொங்கி