பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் பெண் 7 வேண்டாம் என்று சொல்லி வெளியேறிவிட்டாள் அவள். தான் சின்னப்பிள்ளையாக மாறி வந்தாலும் அலப் பறக் கழுதை ஆகிவிடவில்லை என்று காட்டிவிட்ட திருப்தி அவள் முகத்தில் ஒளிர்ந்தது. 'நல்ல பெண்தான். அவன்தான் கெட வைக்கிருன். இல்லேன்னு சொன்ன, இது ஒழுங்காகத்தான் இருக்கும்’ என்று அகிலாண்டத்தம்மாளின் மனம் வருத்தப்பட்டது. சிந்தரத்துக்கு வயசு என்ன, இருபத்தொன்று அல்லது இருபத்து இரண்டு இருக்கலாம். கல்யாணமாகி இரண்டுஇரண்டரை வருஷங்கள் கழிந்திருந்தன. வீட்டில் அவளேக் கட்டுப்பாடுகள் பண்ணுவதற்கு ஒருவரும் இல்லை. தனி வீட்டு ராணி. புருஷனும் அவளுக்குத் தகுந்தபடி வாய்த் திருந்தான். அதனுல் அவளுடைய குறும்புத்தனங்களும் சிறு பிள்ளை விளையாட்டுக்களும் செழித்து வளர வசதியான சூழ்நிலை இருந்தது. அவளுடன் சேர்ந்து ஆடிக் களித்து உற்சாகம் பெறவும், அவளுக்கு ஊக்கமளிக்கவும் பக்கத்து வீடுகளில் அவளுக்கு ஏற்ற தோழிப் பெண்களும் இருந்தார்கள். கல்யாணமான வர்கள், கல்யாணத்துக்குக் காத்திருப்பவர்கள், படிக்கும் குமரிகள் என்று பல ரகத்தினரும்தான். அவர்களுக்கெல்லாம் சுந்தரம்தான் தலைவி. எல்லோரும் அக்கா, அக்கா என்று அவளைச் சுற்றிவந்து வம்புகள் பண்ணி மகிழ்வார்கள். அவர் கள் இருக்கிற இடத்தில் எப்போதும் கூச்சலும் கும்மாளியும் சிரிப்புமாக ஒரே ரகளைதான். - வயசிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவளான அகிலாண் டத்தம்மாள்தான் அடிக்கடி கண்டிப்பாள். பெண்ணுக இப்படியா கனைப்பும் கத்தலுமாப் பொழுது போக்குவது? டக்கம் ஒடுக்கமாக நடந்துகொள்ளவேண்டாம்? இப்படி எல்லாம் வீடே அதிரும்படி சிரிக்கிறது நல்லதில்லே’ என்று சொல்லுவாள். :