பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 瘟感? ஆக ஆக, வீதிகள் எல்லாம் ஜனங்களின் நதிகளாக மாறிக ஒரே திக்கை நோக்கிச் சென்றன. அங்கு அலங்காரப் பந்தல் வர்ணக் கொடிகளோடு, தோரணங்களோடு, ஒளிமிகுந்த விளக்குகளோடு ஜொலித் தது. அதைச் சுற்றிலும் ஜனசமுத்திரம் சிறிது சிறித்ாக அகண்டமாகி வந்தது. பெரிய ஊர்வலம் வந்துகொண்டிருந்தது. வீதிகளின் இருமருங்கிலும் கனத்த கூட்டம். ஊர்வலத்தோடும் அளவிட முடியாத கூட்டம். மாதவன் தனக்குப் பிடித்த உடை தரித்து, தனது அருமைக் குதிரைமீது கம்பீரமாக அமர்ந்து பவனி விந்தான். அவன் முகத்தில் புன்னகை நீங்காது மிளிர்ந்தது. அந்த விதமான கூட்டத்தையும், ஊர்வலத்தையும் பட்டணம் தனது சரித்திரத்திலேயே ஒரு சில தடவைகள் தான் கண்டிருக்க முடியும். "சிந்தனைச் சூரியன் ப ர ப் பி ர ம் ம ம் பி.ஏ.யும் ஒரு குதிரைமீது உலா வந்தார். ஊர்வலம் அலங்காரப் பந்தலே நெருங்கிக் கொண்டிருந்தது. ஜே ஜே கோஷம் மேலோங்கி ஒலித்தது. மாதவன் குதிரையை விட்டிறங்கி, மேடை மீதேத வேண்டும். அதற்கு முன் அவன் குதிரையிலிருந்தபடியே ஜன சமுத்திரத்தின்மீது பார்வை எறிந் தான். அவன் உள்ளத் திலே ஆனந்தமும் பெருமையும் நிறைந்தன. திடீரென்று ஒரு வெடிச்சத்தம். தொடர்ந்து மற்ருெரு வேட்டு. மாதவன் நெஞ்சருகே கை பதித்தான். அங்கிருந்து ரத்தம் பெருகிப் பாய்ந்தது. அவன் குதிரை மீது சாய்ந்து விட்டான். - 'கொலை! யாரோ சுட்டு விட்டார்கள்! மாதவக்னக் கொன்றுவிட்டார்கள்!"