பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏登 மன்னிக்கத் தெரியாதவர் பாடுகிருேம் என்று கூச்சல் எழுப்பி கழுதைக் கூத்து அடிப் பார்கள். இதெல்லாம் பாலுவுக்கும் அவன் அண்ணன் சேது ராமனுக்கும் பிடிக்காது. சுந்தரம் சிரித்தாள். மாப்பிள்ளைப் பிள்ளைக்கு என் மேலே கோபம் போலிருக்கு: மாமாவிடம் சொல்லி எனக்கு அடிவாங்கிக் கொடுக்கணுமின்னு ஆசை போலிருக்கு: என்ருள். "நீ அவனை அடிக்காமல் இருந்தால் போதாதா? உன் புருசன்காரன் உன்னை அடிக்கிறதா இருந்தால் நீ இப்படியா நடந்துகொள்வே? என்று சூ டா க ச் சொன் னு ன் பெரியம்மாள். 2ற்றப் பெண்கள் இதற்கும் சிரித்துக் கெக்கலித்தனர். இது மாதிரி எல்லாம் நடக்கப்படாது சுந்தரம். உன் நன்மைக்காகத்தான் சொல்றேன். இப்போ என் பேச்சு எடுபடாது. சாக மாட் டா த வ புலம்புருளேன்னுதான் தோணும். பிறகு நீயே என்னையும் என் பேச்சையும் நினைத்துக் கொள்ள வேண்டிய காலம் வரும் என்று அகிலாண்டம் கூறினுள். "ஐயோ என் மதனியே! என்று கெண்டையாகப் பேசி, தன் கை ரல்களால் அவள் முகத்தை வருடி, திருஷ்டி கழிப்பவள்போல் தன் நெற்றிப் பொட்டுகளில் வைத்து விரல்களை நொடித்து நெறித்தாள், கலகலவெனச் சிரித்தாள் சுந்தரம். கில்யாணம் செய்துகொள்ளலாமா வேண்டாமா என்று தயங்கியும், இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்? வாழ்க்கை வசதிகள் கொஞ்சமாவது சரிப்பட்டு வரட்டுமே!’ என்று தள்ளிப் போட்டும், வசதிகள் இல்லாதவங்க எத்தனையோ பேரு கல்யாணம் செய்து கொள்ளவில்லையா? தாமும் செய்துகொண்டால் என்ன?’ என்று ஆசையை வளர்த்தும் காலம் கழித்து வந்த சுப்பிரமணியன் கல்யாணம் பண்ணிவிட வேண்டியதுதான்" என்று உறுதியாக முடிவுக்கு