பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் பெண் 置敦 மிதித்துச் செல்வான். அவளும் ஹாயாக அமர்ந்திருப்பாள். இந்த அபூர்வக் காட்சி பார்க்கிறவர்களுக்குச் சுவாரஸ்யமான திாகப்பட்டது. "இப்படிப் போக உனக்கு வெட்கமாக இல்லை?" என்று அகிலாண்டம் சுந்தரத்திடம் ஒரு தடவை கேட்டாள். இதில் என்ன வெட்கம்? எத்தனையோ பேர் ஸ்கூட்டரில் ஜோடியாகப் போகவில்லை? அதுமாதிரித்தானே இதுவும்: பஸ்ஸில் போகலாம்தான். ஆனல் திரும்பி வாறபோது சங்கடமாக இருக்கு. பஸ் கிடைப்பதில்லை. நடந்து வருவது சிரமமாக இருக்கு. இப்படி சைக்கிளில் போய் வருவது செளகரியமாயிருக்கு என்று சுந்தரம் பதிலளித்தாள். அதற்குப் பிறகு பெரியம்மாள் ஏன் பேசப்போகிருள்? இதெல்லாம் எங்கே கொண்டுபோய் விடப்போகுதோ: என்று எண்ணிஞள். வெளியே சொல்லவில்லை. இருநாள்-அன்று பள்ளிக்கூடம் இல்லை-பிற்பகல் மூன்று மணி இருக்கும். அகிலாண்டத்தம்மாளின் மூத்த மகன் சேதுராமன் அறைக்குள் மேஜைமுன் அமர்ந்து என்னவோ எழுதிக் கொண்டிருந்தான். அம்மாள் அடுப்பங்கரையில் படுத்துத் துரங்கும் நேரம். பாலு நண்பன் ஒருவனுடன் வெளியே போய்விட்டான். சுந்தரம் உச்சரம்மா வீட்டுக்குப் போவதற்காக, சிங்காரித்துக்கொண்டு, புத்தகமும் கையுமாகக் கிளம்பியவள் அந்த அறைக்குள் எட்டிப் பார்த்தாள். ஊம். படிப்பு நடக்காக்கும்?' என்ருள். அவன் தலையைத் திருப்பி அவளை நோக்கிச் சிரித்தான். அத்தோற்றம் அவள் மனசில் சிறு கிளர்ச்சி ஏற்படுத்தியது போலும். அவள் ஏதோ ஒரு பாடலை ஊமைக் குரலில் இசைத்த வாறு மெதுவாக ஆடி அசைந்து அவன் அருகில் போய்