பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧盛 மன்னிக்கத் தெரியாதவர் நின்ருள். உன் தலை கருகருவென்று அடர்த்தியாய், என்ன மாச் சுருள் சுருளாயிருக்கு!’ என்ருள். அவள் தலை முடியில் விரல்களை ஒட்டி நீவினுள். -- என்ன அத்தை இது? ஏன் இப்போ கிராப்பைக் கலக்கிறே? என்று சிடுசிடுத் தான் அவன். கலைஞ்சு போனல் என்ன? நான் சீவி விடுகிறேன்: என்று சொல்லி ஒய்யாரப் பார்வை பார்த் தாள் சுந்தரம். சரி சரி. நீ உன் வேலையைக் கவனிக்கப்போ. நான் எழுத வேண்டியது நிறைய இருக்கு என்று அவன் முனு. மூணுக்கவும், அவள் தன் புத்தகங்களை மேஜைமீது வைத்து விட்டுக் கைகளை அவற்றின் மீது ஊன்றி, முகத்தைக் கைகள் தாங்கி நிற்க, உடலை வளைத்துக் குனிந்து நின்று, அவன் கண்களில் கண் பதித்தாள். என்ன ஓயாத படிப்பு வாழுது? அத்தை கூடக் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தால் என்னவாம்?’ என்ருள். அவன் மூஞ்சியை உம்மென்று வைத்துக்கொண்டு புத்தகத்தைப் படித்தபடியே இருந்தான். அவள் அவனுக்குப் பக்கத்தில் நின்றதும், அவள் உ ட லு ம் உடையும் எழுப்பிய மனங்களும் அவனே என்னவோ செய்தன. அவள் முகத்தை, விழிகளே, மேனி வளப்பத்தை அவன் விழிகள் அவ்வப்போது பார்த்து ரசிப்பதும், பின் தாழ்ந்து விடுவது மாக இருந்தன. அவன் குழப்பத்தை அவள் வெகுவாக ரசித்தாள். மேலும் அவனை வெட்கமுற்றுக் குழம்ப வைக்க வேண்டும் என்ற ஆசை அவளுள் கிளர்ந்தது. 'கண்ணேப் பாரு குறுகுறுன்னு. மூக்கு கொழுக்கட்டை மாதிரி இருக்கு...' என்று வர்ணிக்க ஆரம்பித்தாள். "இருந்தால் இருந்துவிட்டுப் போகுது!’ என்று எரிந்து விழுந்தான் அவன். உனக்கென்ன அதைப்பற்றி வந்து பாரு, ஸ்ர்டிபிகேட் கொடு என்று உன்னை யாரும் கேட்கலியே! என்ருன்,