பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5 மன்னிக்கத் தெரியாதவர் இது அவன் எதிர்பாராதது. அவன் எண்ணியும் பார்த் திராத ஒரு காரியத்தை அடுத்துச் செய்தாள் அவள். அவன் இது சாய்ந்துகொண்டாள். இதை மறந்திடாதே! என்று காதில் கிசுகிசுத்துவிட்டு, எழுந்து, நிதானமாக வெளி வேதினுள். திரும்பிப் பாராமலேயே நடந்தாள். சேதுராமனை ஒருவித பயமும், வெட்கமும், மகிழ்ச்சியும் குழப்பின. தேகம் நடுக்கமுற்றது. இவ என்ன இப்படி விருக்கா என்று எண்ணிலுைம், அவள் செயல் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது; இனித்திருந்தது. அம்மா எழுந்து, விழித்தபடி இருப்பாளோ, அவளுக்கு அறையில் நடந்தது தெரிந்திருக்குமோ என்ற அச்சம் உதைக்கவும், அவன் எழுந்து வந்து எட்டிப் பார்த்தான். அம்மா நிம்மதியாகத் துரங்கிக் கிடந்தாள். "நல்லதாப் போச்சு!’ என்று மகிழ்வுற்ருன் அவன். கறுபடியும் நாற்காலியில் உட்கார்ந்த அவனுக்குப் படிப்பதில் கவனம் செல்லவில்லை. பக்கத்து வீட்டு அத்தை"யின் சொல்லும் செயலும் அழகும் நினைவில் சுழன்று சுழன்று அவனுக்கு உள்ளுற ஆனந்தம் அளித்தன. . சிந்தரம் கவலையில்லாத சி ன் ன ப் பெண் மாதிரி விளேயாட்டுத்தனமாகக் காட்சி அளித்துவந்த போதிலும் அவள் உள்ளத்தில் பல ஏக்கங்களும் வருத்தங்களும் மண்டிக் கிடந்தன. அவற்றை மறப்பதற்காகக்கூட அவள் சிறு பிள்ளைபோல் ஆடிக்களிக்கத் துணிந்திருக்கலாம். அவளுக்கு இருந்த கவலைகளில் எல்லாம் பெரியது. கணவன் சுப்பிரமணியனைப் பற்றியதுதான். அவளுக்குத் தெரிந்த எத்தனையோ பெண்கள், அவளுடன் பழகிப் பிரிந்த பல சிநேகிதிகள் அனைவருக்கும் அவர்களுடைய வயசுக்குத் தகுந்த-அவர்களுடைய தகுதிகளுக்கும் தோற்றத்துக்கும் ஏற்ற-கணவர் கிடைத்திருந்தனர். அவர்களில் பலரைவிட வசீகர அழகியான தனக்கு வயசில் மூத்த, கிழத்தோற்றம் பெற்ற, கவர்ச்சித் தன்மை அதிகம் இல்லாத ஒருவர்