பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛貌 மன்னிக்கத் தெரியாதவர் பாவம்' என்று குழைவுக் குரலில் பேசி, விரல்களை அவன் கன்னங்களில் இழைய விட்டாள். போ அத்தை, என்ன நீ! என்று சிணுங்கிளுன் அவன். *சசி. அந்த மாப்பிள்ளைக்கு இந்தப் பொண்ணு பொருத்தமா இருக்குமா பாரு' என்று அவள் இன்ளுெரு போட்டோவை அவன் கையில் வைத்தாள். அதுவும் அவள் படம்தான். பாவாடை, தாவணி கட்டி , கத்தலே நீளமாகப் பின்னித் தொங்கவிட்டு, பள்ளிக்கூடம் செல்லும் மாணவிபோல் புத்தகமும் கையுமாகக் காட்சி தந்தாள். நேரில் காண்பதைவிட, சிறிது இளையவளாகவே அவள் அப்படத்தில் தோன்றினுள். நல்லாருக்கு. இதில் நீ ரொம்ப நல்லாயிருக்கே!' என்று தன் ரசனையையும் வியப்பையும் வெளியிட்டான் அவன். அவள் உள்ளத்தின் மலர்ச்சி முகத்தின் அழகுச் சிரிப்பாகப் பூத்துக் குலுங்க, அவன் சொற்களை காதில் வாங்கிக் கொள்ளாதவள்போல, இந்தப் பெண்ணை உனக்குப் பிடிச்சிருக்கு இல்லே? இவளை நீ கல்யாணம் கட்டிகிடுறியா? என்ருள், குறும்புத்தனமாக. அவன் என்ன சொல்வது என்று புரியாத குழப்பத்துடன் தவிக்கையில், ஆசைதான் பையனுக்கு இவளுக்கும் நமக்கும் நல்ல ஜோடிப் பொருத்தம்னு எண்ணி எண்ணி சொக்கிப் போருப்லே தோணுது என்ருள். குலுங்கிச் சிரித் தாள். . சி போ, கொஞ்சம்லுைம் வெட்கமே இல்லாமே!’ என்று சிடுசிடுத்தான் அவன். . ஹை , முகம் சிவந்து போச்சே: மூக்குநுனி சிவப்பா விட்டுதே! கோபம்தான? ஸார், கோபம்தான?’ என்று கிண்டல் பண்ணியவாறே, அவன் கையிலிருந்த படங்களைப் பிடுங்கிக்கொண்டு, அவனை ஒரு தினுசாகப் பார்த்தாள். முகம் நிமிர்த்தி அவளை நோக்கிய சேது அந்தப் பார்வை யைத் தாங்கிக்கொள்ள முடியாதவளுய்த் தலைகுனிந்தான்.