பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛岛 மன்னிக்கத் தெரியாதவர் பாலுளின் பேச்சில் அர்த்தம் புதைந்து கிடந்தது. அதை அங்கீகரிக்க விரும்பாத அண்ணன், "சீச்சீ, நீ ஒண்ணு..." என்று இழுத்தான். அதைப் பெரிதுபடுத்தாமல் தம்பி சொன்னன்: இந்த அமராவதிக்கு ஏற்ற அம்பிகாபதி அவன் தான்! அவன்கூடச் சிரித்துப் பேசி விளையாடுவதில் இவளுக்கும் இன்ட்டரஸ்ட் அதிகம் தான். டீச்சர் வீட்டுக்குப் பின்பக்கம் பெரிய தோட்டம். அதிலே இவள் சைக்கிள் கற்றுக் கொள்கிருள். அவன்தான் உதவி பண்ணுகிருன் சைக்கிள்விடக் கற்றுத் கொள்கிறேன் என்ற சாக்கில் இவளும், இவள் கீழே விழுந்து இடாமல் பிடித்துக் கொள்கிறேன்-சரியாக இருந்து ஒட்டும் படி ஹெல்ப் பண்ணுகிறேன் என்று அவனும் எவ்வளவோ ஜாலிகள் அனுபவிக்க முடியுது' உனக்கு எப்படித் தெரியும்?? என் கூடப் படிக்கிற பத்மநாபன் வீடு அந்த டீச்சர் விட்டுப் பக்கம்தான். அவன் வீட்டு மாடியிலிருந்தால், தோட்டத்தில் நடப்பதை எல்லாம் பார்க்க முடியும். இந்தத் தோட்டத்தில் சினிமா சீன்கள் நடக்கும், நீயும் வந்து பாரு என்று அவன் ஒரு நாள் என்னக் கூட்டிப்போன்ை. அதற்குப் பிறகும் இரண்டு மூன்று தடவைகள் நான் என் கண்ணுல் பார்த்தேன். . . . சனியன் எப்படியும் தொலேயட்டும்!” என்று அந்தப் பேச்சுக்கு முடிவுகட்ட முத்தினன் அண்ணன். அவனைச் சந்தேகிக்கவில்லை. அத்தை சுந்தரம் எப்படி விளையாடுவாள் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன? அந்த எண்ணம் தான் அவனுக்கு எரிச்சல் மூட்டியது. எவனே ஒரு செல்வராஜுக்கு அதிர்ஷ்டம் அவன் பேரில் இவனுக்கு வீண் பொருமை பொங்கியது. வெளி வாசலில் வழியை மறித்துக்கொண்டு நின்றிருந் தாள் சுந்தரம்.