பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் பெண் &雪 'மாப்பிள்ளைக்காளை வேலை எதுவும் இல்லாமல் ஜாலி பண்ணிக்கிட்டுத் திரிகிற ஷோக் மைனர். இவன் அக்கா உச்சர் வேலை பார்த்துச் சம்பாதிக்கிரு. அக்காளுக்குத் தெரிஞ்ச பொண்ணுகளுக்கு ஆசைகாட்டி, ஏமாற்றி, விளே யாடி வாழ்கிருன் இவன்..." அவர் இயல்பாகச் சொல்விக்கொண்டிருந்தார். சுப்பிர மணியன் முகம் கறுத்தது. பாலு சொன்ன வார்த்தைகள் இப்போது அவன் காதுக்குள் வொணவொண" என்று மொய்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. சுந்தரத்தைப் பற்றி இந்த ஆளுக்கு ஏதாவது தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்கு உண்டாயிற்று. அவர் பிறகு அதையும் இதையும் பேசிவிட்டுப் பிரிந்து ப்ோனர். சுப்பிரமணியன் குழம்பும் உள்ளத்தோடு தன் வழியே போனன். அன்று அவன் சுந்தரத்திடம் எதுவும் கேட்கவில்லை. எனினும், அவளை, அவள் முகத்தை, அடிக்கடி ஒரு மாதிரியாகக் கவனித்தான். அவள் வழக்கம்போல் சிரிப்பும் வேடிக்கைப் பே ச் சும் பிரியமுமாகத்தான் அவனிடம் பழகிளுள். பெண்களால் ரொம்ப சாமர்த்தியமாக ஏமாற்ற வும் முடியுமோ?’ என்று குறுகுறுத்தது அவன் மனம். அவளைப் பற்றித் தவருக முடிவுகட்டவும் மனம் இடம்கொடுக்கவில்லை. வேருெரு நாள் சாயங்காலம் அவன் ஒரு முக்கிய அலுவலக் கவனித்துவிட்டுத் திரும்புகிறபோது சினிமா தியேட்டர் ஒன்றின் அருகே வர நேர்ந்தது. அப்போதுதான் மாட்டினி காட்சி முடித்து, கும்பல் வெளியேறிக்கொண் டிருந்தது. அதை வேடிக்கையாகப் பார்த்து நின்ற அவன் பார்வையை உறுத்தியது ஒரு காட்சி, - வெளியே மெதுவாக வந்த ஸ்கூட்டர் ஒன்றில் ஒரு வாலிடன். அன்ருெரு நாள் ஒட்டலருகில் பார்க்க நேர்ந்ததே, அவனே தான். அவன் பின்னல், அவன் தோள்களில் கை பதித்து, அவன் முதுகில் சாய்ந்தவாறு, சிரித்தபடி காட்சி அளிப்பது? -