பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器爵 மன்னிக்கத் தெரியாதவர்

இந்தப் படிப்புப் படிக்கத்தான் உன்னை டீச்சர் வீட்டுக்கு நான் அனுப்பினேனே?’ என்று கூப்பாடு போட் டான். அது அவன் குரலாகவே ஒலிக்கவில்லை. "என்னை மன்னிச்சிடுங்க. நான் தெரியாமல். . . . அவள் நெஞ்சைத் தொடும் குரலில் கெஞ்சி, பரிதாபகரமாக அவன் முகத்தைப் பார்த்தாள். அவளறிந்த, அவளிடம் அன்பும் ஆசையும்கொண்டு நெருங்கக்கூடிய, அவன் முகமாகவே இல்லை அது. • 'என்னே நீ ஏமாற்றிப்போட்டே. என்னை அசடன்னு தினேச்சுப் போட்டே. இனிச்சவாயன் னு எண்ணிப்போட்டே. அப்பாவின்னு, மூட்டாள்னு நினைச்சிட்டே. நான் எப்படிப் பட்டவன்னு தெரிஞ்சுக்கோ! எ ன்று மந்திரம்போல் உச்சரித்து, சொல்லுக்குச் சொல் அர்ச்சனை மாதிரி சவுக்கைச் சுழட்டி அடித் தான். முதுகு, கால், கை, முகம். உடம்பின் பல பகுதிகளிலும்-அடி எங்கே விழுகிறது என்ற கவலை இல்லாமல்-ஈவு இரக்கமற்று அடித்தான். அவள் அழுது அரற்றினுள். ஓவெனக் கூப்பாடு போட்டு, வலி தாங்க முடியாது துடித்தாள். சுருண்டு கீழே விழுந்தாள். பாவி அவளைக் கொல்லுதானே! ஐயோ, பாவம்... கதவடைச்சிக்கிட்டு அடிச்சுக் கொல்லுதானே! என்று பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லோரும் அவ்வீட்டின்முன் கூடிவிட்டார்கள். கதவைத் திறங்கய்யா, ஏன் இப்படி அடிக்கீங்க?' என்று கத்தி, கதவைத் தட்டினர்கள் சிலர். சில பேர் ஜன்னல் வழியாய் உள்ளே பார்த்துப் பரிதவித்தார்கள். ஐய்யய்யோ, சுந்தரத்தைக் கொளுத்தப்போருரு. அதோ தீப்பெட்டியை எடுத்துக் குச்சியைக் கிழிக்காரு!" என்று ஒருத்தி கூவினுள். மற்றவர்கள் கதவைத் தட்டுதட்டென்று தட்டினர்கள். அவன் எரிச்சலுடன் முன் பக்கம் வந்து இந்தா பாருங்க, இது என் சொந்த விஷயம். அவ ஒண்ணும் செத்துப் போக மாட்டா. நான் கொல்ல்ப் போறதுமில்லே' என்று வறண்ட குரலில் பேசிவிட்டு உள்ளே போனன். •