பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 選5 ஒருநாள், பொழுது நன்ருகப் புலரவில்லை. ஐயோ! கரிமுடிஞ்சு போவான், குடியைக் கெடுத்தானே, எந்தப் பாவி எத்தனை நாள் காத்திருந்து இந்த மாதிரிச் செஞ் சானே!’ என்ற ஒலம் தெற்குத் தெரு மூலையில் எழுந்தது. தொடர்ந்து கூ கூ, ஒ என்று தெளிவில்லாமல் இரைச்சல் களும், திமுதிமுவென ஒடுகிற காலடி ஓசையும் கேட்கலாயின. மகராஜபிள்ளை திடுக்கிட்டுக் கண்விழித்து, கட்டிவில் நிமிர்ந்து உட்கார்ந்தார். என்ன நடந்துவிட்டது இப்போ?” என்று அவர் மனம் கேட்டுக்கொண்டது. அவர் பதிலைத் தேடவில்லை. விளக்கம் தானுகவே அவரைத் தேடி வந்தது. வேலுப்பிள்ளை உருவத்தில். பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவன் தோற்றம். அவன் பிள்ளை காலில் வந்து விழுந்தான். போச்சு. எல்லாம் போச்சு. கைப்பெட்டி, சேர்த்துவச்ச பணம், அவள் நகை தட்டு எல்லாம் போயிட்டுதே. நான் என்ன செய்வேன்?" என்று அலறிஞன். நீங்கதான் காப்பாத்தணும். நீங்க மனசு வச்சால் திருட்டுப்பய எப்படியும் அகப்பட்டுவிடுவான்’ என்று கெஞ்சினன். பிள்ளை ஒன்றும் பேசாமல் இருந்தார். அவர் கண்கள் ஜிவுஜிவு என்று கனன்று ஜொலித்தன. "ஏய் வேலு: என்று ஒரு அதட்டல் போட்டார். இது என்ன பொட்டச்சி மாதிரி: இது எனக்குப் பிடிக்காது’ என உறுமினர். வேலுப்பிள்ளை அஞ்சி விலகிஞன். எழுந்து கையைக் கட்டிக்கொண்டு நின்மூன். அவன் மனைவி அகிலாண்டம், 'சித்தப்பா, நீங்க இருக்கிற ஊரிலேயே, உங்க கண் முன்னலேயே இப்படி நடக்கலாமா?’ என்று அழுது அரற்றிக் கொண்டு வந்து சேர்ந்தாள். * - ஏ. அகிலு, பேசாம வீட்டுக்குப் போ. இப்ப யாரு செத்துப் போளுயின்னு லபோ லபோங்கிறே!’ என்று அவன் அதட்டிஞர் பிள்ளை. வயிறு எரியுதே சித்தப்பா. என் நகை ஒண்னு பாக்கி பில்லாம. , . என்று அவள் ஆரம்பிக்கவும், சரிசரி. இப்படி