பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘等 மன்னிக்கத் தெரியாதவர் அழுது புலம்பினுல், போனது வந்திருமா?’ என்று சத்தம் போட்டு அவளே அடக்கினர் மகராஜபிள்ளை. ஒரு ஆளைப் பார்த்து, தலைமைக்காரத் தேவரைக் கூட்டிவாரும். கூடவே பாண்டித் தேவரு பெருமாள் தேவரு ரெண்டுபேரையும் வரச்சொல்லும். இப்பவே வரும்படி சொல்லும் என்று உத்தரவிட்டார் பிள்ளை. - பின்பும் அவர் பரபரப்போ பதட்டமோ கொள்ளவில்லை. சாவகாசமாக வெற்றிலைச் செல்லத்தை வைத்துக்கொண்டு வெற்றிலே போடுவதில் ஈடுபட்டார். நேரம் கட்டித் தொங்க விடப்பட்டதுபோல் கனத்துத் தோன்றியது மற்றவர் களுக்கு, பிள்ளையோ எதையுமே உணர்ந்ததாகத் தோன்ற வில்ல். மகராஜபிள்ளே கூப்பிட்டு ஆள் அனுப்பியிருக்கிருர் என்ருல், மறுப்புரை கூறவோ வாய்தா சொல்லவோ துணிவு பெற்ற நபர் மறக்குடியில்கூட இருந்ததில்லை. தலைமைக் காரத் தேவர் என்ற பட்டம் பெற்ற வெள்ளேயத் தேவர்: பணபலம் பெற்றிருந்த பாண்டித் தேவர், அசாத்தியத் திண்ம்ை உடல் வலிமையும் கொண்டிருந்த பெருமாள் தேவர். இன்னும் இரண்டு பேர் எல்லோருமாக என்னவோ ஏதோ என்று, பதைபதைப்போடு வந்து சேர்ந்தார்கள். தெரு முனையில் வருகிறபோதே, தோளில் கிடந்த துண்டை இறக்கிக் கையில் தொங்கவிட்டவாறு வந்தார்கள். 'எசமான் கும்பிடுகிருேம் என்று மரியாதையாக வந்து வணங்கிஞர்கள். 'உம்' என்று தலை அசைத்தார் பிள்ளை. வாங்க தேவர் களே! இப்படி பெஞ்சிலே உட்காருவதுதானே! என்று சொன்னுர். அக்குரலில் தொனித்த குத்தலும் கிண்டலும் வந்தவர்களே லேசாக ஒரு ஆட்டு ஆட்டின. என்ன எசமான் நீங்க... என்று மென்று விழுங்கினர் தலைமைத் தேவர். ஊரிலே தேவமாரு ராச்சியம்தானே நடக்குது; உங்க கொடிகட்டி உயரப் பறக்கையிலே, நான் உங்களுக்கு உரிய