பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 37 மரியாதை கொடுக்கவேண்டாமா?’ என்று எக்காளமாகப் பேசினர் பிள்ளை, 'எசமான் என்னமோ தப்பாக எண்ணிக்கொண்டு, ...' தேவரைப் பேசவிடவில்லை பிள்ளை. 'தப்போ சரியோ எனக்குத் தெரியாது. ஊருக்குள்ளே புகுந்து, திருடிக்கொண்டு போகணுமின்னல், உங்க ஆள் களுக்கு என்ன நெஞ்சழுத்தமும் தைரியமும் இருக்கணும்? அதை நீங்களும் விட்டுத் தானே வைச்சிருக்கிறீங்க? இதைக் கேட்கத் தான் உங்களை வரவழைத்தேன்...' என்று சொன்னர்: அமைதியாகத்தான் பேசினர் அவர். "எங்க ஆளுக இதைச் செய்திருக்க மாட்டானுக, அசலூர்க்காரனுக எவனுவது..." என்று பாண்டித் தேவர் வாய்திறந்தார். - - - தேவரே, என் காது முன்னலேயே குத்தித்தான் இருக்குது. இப்ப நீரு வந்து காது குத்துற வேலையை எடுக்க வேண்டாம். உள்ளூர் பூனையின் ஒத்துக்கை உளவு இல்லாமே அசலூர் ஆன வந்து இங்கே வாலாட்டிவிடுமோ? என்னவே போட்டுப் பேசுதேரு!’ என்று சொல்லிச் சிரித்தார் பிள்ளை. தேவர்கள் ஆளுக்கு ஒன்ருகச் சமாதானம் சொல்ல முயன்ருர்கள். மகராஜபிள்ளையிடமா எடுபடும்? "அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போ மணி என்ன? ஆறு ஆகுதா? சரி, ஆறு மணி நேரம் தாறேன். மத்தியானம் பன்னிரெண்டு மணிக்குள்ளே கைப்பெட்டி வந்துசேரனும். பணம் , நகை எல்லாம் அப்படியே திரும்பி வந்திரனும் தெரிஞ்சுதா? இல்லே, அப்புறம் நடக்கிறதுக்கு என் மேலே குறை சொல்லிப் பயனிராது. ஆமா. மறக்குடி பூராவும் தீப்பீடிச்சு எரியும்படியா, செவலைக் காளையை ஏவி விடுவேன். அதுமட்டுமில்லே, மறத்தி ஒருத்தி கழுத்திலாவது தங்க நகை இருக்காது அப்புறம். மகராஜபிள்ளை எப்படியாப் பட்ட ஆளு என்கிறது புதுக்குடித் தேவமார்களுக்குச் சொல்லியா தெரியணும்? உம். போயிட்டு வாங்க என்று