பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை கிால ஒட்டத்தில் சமூகத்திலும் நாட்டிலும் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. மனிதரின் வாழ்க்கை முறை களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்திருக்கின்றன. ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்பு நாட்டில், சிற்றுரர்களில், வாழ்க்கை வசதிகளும் அடாவடித்தனமும் பெற்றிருந்த ஒருசிலர் நடத்திவந்த ஆர்ப்பாட்டப் போக்குகள் பிற்காலத்தில் அனுபவ சாத்தியம் இல்லாதனவாகிவிட்டன. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து அட்டகாசச் செயல்கள் புரிந்த ஒருவரின் வாழ்க்கைதான் மன்னிக்கத் தெரியாதவர் கதை. அதில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் சில இப்படியும் நடக்குமா? நடந்திருக்க முடியுமா?’ என்று எண்ணவைக்கும். ஆனால், வாழ்க்கையில் எவ்வளவோ நடந்திருக்கின்றன; என்னென்னவோ நடக்கின்றன.

  • மன்னிக்கத் தெரியாதவர் க ைத யி ன் நாயகர் வித்தியாசமான-விசித்திரமாண-மனிதர்தான்.

இந்த விதமான விசித்திர மனிதர்களின் விந்தைப் போக்குகளை சுவாரஸ்யமாக விவரிக்கின்றன இத் தொகுப் பில் உள்ள குறுநாவல்கள். இவற்றில் ஹீரோ தனிரகமான படைப்பு. வாழ்க்கை யின் அடிநிலையில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் ஜன சமூக வெறுப்பையும் கசப்பையும் அவனது பிந்தைய வாழ்வின் செயல்கள் வெளிப்படுத்துகின்றன. இது ரசமான மனித நாடகம். இக் குறுநாவல் அரசியல் நாவலின் தன்மைகளையும் கொண்டிருக்கிறது. iii