பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛2 மன்னிக்கத் தெரியாதவர் பிள்ளை பெரும் சிரிப்புச் சிரித்தார். மன்னிப்பா? மகராஜபிள்ளையிடமா? இந்த இடத்திலே அந்த வார்த் தைக்கு விலேயே கிடையாது தம்பி, அது இங்கே செல்லாது” என்று அகங்காரத்தோடு அறிவித்தார். - "நான் அந்தப் பக்கமே அடியெடுத்து வைக்கமாட்டேன். காலையிலே எல்லோரும் வாங்க. கவனிப்போம் என்று உறுதி கூறி அவர்களே அனுப்பிவைத்தார். "பலபலவென்று வி டி வ த ற் கு முன்னடியே பிள்ளை பாண்டான்கள் வந்துவிட்டார்கள். ஒரே கூட்டம் நடுத் தெருவில், வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல்" திறக்கப்போவதைக்கூட அவ்வளவு ஆவலோடு எதிர்பார்க்க மாட்டார்கள் பக்தர்கள். ராமலிங்கம் வீட்டினுள்ளிருந்து கதவைக் குலுக்கு குலுக் கென்று குலுக்கி அலுத்துப் போயிருந்தான். காலை நான்கு மணியிலிருந்து அவனுக்கு அவசரம். அவன் காமினியை யாருக்கும் தெரியாமல் அவள் வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டுமே என்றுதான். அதற்கு வழி இல்லாமல் போய் விட்டது: விஷயத்தை ஊகித்துக்கொண்டு, அவன் வசைமாரி வில் இறங்கினன். என் வீட்டில் நான் என்னவும் செய்வேன். தெரு தாய்களுக்கு ஏன் வீண் அக்கறை? நாய்கள் ஏன் இப்படி அலையனும்?' எனத் தொடங்கி, கண்டபடி ஏசிக்கொண்டிருந் தான். மற்றவர்கள் ம க ராஜ பி ள்ளே யை யு ம் அழைத்துக் கொண்டு வந்து சேர் ந் தா ர் க ள். அவர் இடிக்குரலில் உறுமினுர்: டேய் ராமு, என்னடா வாய் மிஞ்சிப் போகுது? அடக்கிப் பேசு' என்ருர். பின்னே என்ன? வீடு என்றிருந்தால் அதிலே எல்லாம் தான் நடக்கும். தெருக்காரங்க ஏன் நாய்மாதிரி மோப்பம் புடிச்சுக்கிட்டுத் திரியனும்? பொருமைதான்...' என்று அவன் கத்தினன்.