பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛蛟 மன்னிக்கத் தெரியாதவர் ஆண் கண்ணக் கசக்கிக்கொண்டு நிற்கக்கூடாது. சொத்தும் தகமுமா நல்ல நிலையில் வாழவேண்டும் என்றுதான் ஆனைப் பெற்றவர்கள் எண்ணிஞர்கள். மகராஜபிள்ளையை மணந்துகொண்ட சண்பகத்துக்குக் குறை எதுவும் இல்லைதான். அவள் அத்தை மகன் சுந்தரம் குறுக்கிட்டிராவிடில் அவள் சொத்து சுகத்தோடு, சந்தோஷத் இத்ாடு-சராசரிப் பெண்ணுக்கு இருக்கக்கூடிய ஆசைகள் கனவுகள் ஏக்கங்கள் ஏமாற்றங்கள் வகையராவோடும்காலம் முழுவதும் கழித்திருப்பாள் என்பதிலும் சந்தேகம் வேண்டியதில்லைதான். . - ஆனல், மனித வாழ்க்கை எனும் நெடுங் கதையில், இல்லாத பொல்லா த தில்லுமுல்லுகள் வம்புகள் தும்புகள் எல்லாம் பண்ணுகிற 'வில்லன் காலம் சண்பகத்தின் வாழ்வி லும் தன் சித்து விளையாடல்களைப் புகுத்தியது.

இந்தப் பக்கமாக வந்தேன். சும்மா அப்படி பார்த்து ஆட்டுப் போகலாமே என்று இங்கும் எட்டிப் பார்த்தேன்’ என்று சொல்லிக்கொண்டு சுந்தரம் முதல் முதலாக ஒரு தாள் வந்துசேர்ந்தான். அதுமுதல் அப்படியே ஒவ்வொரு தடவையும் முதல்தடவையாக வருவதுபோல் அடிக்கடி வரலாஞன். சண்பகத்தின் மூன்று வயசுப் பையனிடம் அதிக மான பிரியம் காட்டிஞன். கொஞ்சி விளையாடினன். அதன் மூலம், அம்மாவின் மனசின் ஆழத்தில் உறங்கிக்கிடந்த ஆசைக் கனவுகளுக்குப் புத்துயிரும் பசுமையும் புகுத்த லானன். -

ஒரு சந்தர்ப்பத்தில், மகராஜபிள்ளை முக்கிய அலுவல் காரணமாக வெளியூர் போயிருந்தார். திரும்பிவர இரண்டு நாட்கள் ஆகும் என்று கூறியிருந்தார். தற்செயலாக அன்று சுந்தரம் அங்குவந்து சேர்ந்தான். இதைத்தான் வில்லன் காலத்தின் விளையாட்டு என்ற கணக்கில் சேர்க்கவேண்டும்: தனிமை இருந்தது. வீட்டில் அவர் இல்லை என்பதனல் உண்டான ஒருவகைச் சுதந்திர உணர்வும் இருந்தது. சபலம் உள்ளத்தில் இருந்தது. உணர்வுகளில் ஒரு கிளுகிளுப்பு