பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 43 வில்லையா? பூர்வஜன்ம கர்மா என்று பெரிய வார்த்தைகளைப் போட்டுப் பேசுகிரு.ர்கள் மதவாதிகள். அவரவர் செய்கிற பாவங்கள் பழிகளுக்கு நிச்சயம் தண்டனை உண்டு; அவரவர் வாழ்நாளிலேயே அனுபவிக்க நேர்கிறது. பலருக்கு; மற்றவர் கள் இனிவரும் பிறப்புகளில் அனுபவிப்பார்கள் என்றும் சொலகிருர்கள். இது எல்லாம் எதைக் காட்டுகிறது? கடவுள் மன்னிப்பது கிடையாது; எல்லோருக்கும் உரிய தண்டனை கொடுத்துக்கொண்டிருக்கிருர் என்பதைத்தானே?” தமது செயல்கள் நியாயமானவை என்று சாதிப்பதற் காகப் பிள்ளை அவர்கள் இதை எல்லாம் பேசுவதாக எண்ணுவதில்லை மற்றவர்கள். அ. வ ரு ைட ய அறிவின் பிரகாசம் ஒளிவீசுவதாக எண்ணி, பிரமித்து, மறுப்புரை கூறத் துணிவில்லாமல் இருந்துவிடுவார்கள் ஊராரும் உறவினரும். சண்பகத்திற்காகப் பரிந்து பேசவந்த உறவினரிடமும் பிள்ளை இதைத்தான் சொன்னர். ஆனானப்பட்ட முனிவர்கள் கூட இதுபோல் குற்றம் செய்த பெண்களுக்கு சாபம் என்கிற தண்டனை கொடுத்ததாகத்தான் உங்க புராணங்கள் சொல் கின்றன. பின்னே? நான் முனிவரோ, தேவளுே இல்லை. விருப்பு வெறுப்புகள் கொண்ட மனிதன்தானே? தனக்குத் துரோகம் செய்த-தனது மானத்தையும் மதிப்பையும் சீர் குலைக்கிற-பெண்டாட்டியை அடித்துத் துரத்துவதிலே என்ன தவறு இருக்கு அவளை நான் மீண்டும் இந்த வீட்டிலே நடை ஏற்றமுடியாது. அவளுக்குத் தேவையான பணம் கொடுத்து விடுகிறேன். பையனே அவளிடம் அனுப்பமுடியாது. அவனே நான் வளர்த்து ஆளாக்கிவிடுவேன்' என்று திடமாகத் தெரி வித்துவிட்டார். சந்தர்ப்ப வசத்தினால், ஒரு கணத்தின் பலவீனத்தினல், தவறு செய்துவிட்டபோதிலும் பிறகு இதயபூர்வமாகத் தன் பிழை உணர்ந்து வருந்தி, பிராயச்சித்தம் கோருகிறவர் களுக்கு மன்னிப்பு தரப்படல் நன்று என்ற தத்துவம் பிள்ளே அவர்களின் ஆமோதிப்பை ஒருபோதும் பெற்றதில்லை.