பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 苏器 உள்ளத்தில் உறுத்தாதவாறு அவனைச் சீராட்டி, சிறப்பாக வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டி வரலாஞர். மிகராஜபிள்ளை புது க் கு டி எனும் சிற்றுாரிலேயே, “தாத்தா, தாத்தாவுக்கும் தாத்தா காலம் முதற்கொண்டு' செயலாக இருந்துவரும் குடும்பத்தில் வந்தவர். அவரும், அந்த ஊர் அம்மாமார்கள் சொல்லிக்கொள்வதுபோல, 'திண்ணையிலே திண்டு போட்டுச் சாய்ந்து ஆக்கினைகள் செய்து தமது பெருமையை நிலைநிறுத்தி வருகிறவர். அவர் புதுக்குடியை விட்டு வெளியேற விரும்பியது கிடையாது. அதற்காக அவருடைய புத் திரடாக்கியமான ரத்தினமும் அவ்விதமே வசிக்க வேண்டும் என்று பிள்ளை அவர்கள் ஆசைப்பட்டதும் இல்லை. அப்படி அவனையும் அந்தப் பட்டிக் காட்டுக்குள்ளேயே மூடக்கிப்போடுவது அவனுக்கு நல்லது செய்வது ஆகாது’ என்றே அவர் எண்ணிஞர். பிள்ளை பெரிய பள்ளிக்கூட ம் போய் கோணல் எழுத்து யடித்து'த் தேறவில்லை. அது அவருக்குப் பெரிய குறையாக வும் படவில்லை. அவர் காலத்துக்கு அது சரி. இனிமேல் அது சரிப்பட்டு வராது என்று அவர் உணர்ந்தார். - முச்சந்திக் கவிராயர் ஒருவர் பாடியது அவர் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. இங்கிலீசுக்காரரசு: இந்தியா வரவர சொகுசு!" என்று ஆரம்பித்து, காலவேகத்தில் நாட்டில் ஏற்பட்டு வந்த மாற்றங்களைச் சுவையாக வர்ணித் தது அந்தப் பாடல். அந்த மாறுதல்களே ரத்தினமும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். அவன் அவனுடைய தந்தை யைப் போலவோ, தாத்தா போலவோ அந்த ஊரில் அதிகாரம்பண்ணி வாழ்ந்துவிட முடியாது என்று அவருக்கு நிச்சயமாகப்பட்டது. மகன் அருகிலுள்ள நகரத்தில் போய் கல்வி கற்க வேண்டியது அவசியம் என்று தந்தை தீர்மானித்தார். ஒட்டல் சாப்பாடு அவன் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. ஹாஸ்டல் சூழ்நிலை அவனுக்குச் சரிப்பட்டு வராது என்று