பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎壶 மன்னிக்கத் தெரியாதவர் எண்ணிஞர். தனி வீடு அமர்த்தி, அவருக்கு அக்காள் முறை ஆகவேண்டிய ஒரு அம்மாளே அவனுக்குச் சமைத்துப்போட்டு நன்கு கவனித்துக்கொள்ளும்படி ஏற்பாடு செய்தார். எப்பொழுதாவது அவர் நகரத்துக்கு விஜயம் செய்து, மகனைப் பார்த்து, அன்பாக விசாரிப்பார். அவன் தேவை களைப் பூர்த்தி செய்வார். அவனுக்கு அவர் குறை எதுவும் வைக்கவில்லை. அவருக்கு அவன்மீது எல்லையில்லாத பாசம். அவன் பண்புடனும் திறமையோடும் படித்துப் பெரியவனகி வருவதை எண்ண எண்ண அவருக்குத் தனிப் பெருமை. உள்ளத்தில் ஒரு பூசிப்பு. அவனுடைய அம்மாவைப்பற்றி அவர் அவனிடம் பேசவே மாட்டார். அவருக்குப் பிடிக்காத விஷயங்களை உணர்ந்து, அவற்றைப்பற்றிப் பேச்செடுக்கவே விரும்பாது ஒதுங்கிவிடச் சின்னஞ்சிறு வயசிலேயே கற்றுக்கொண்டான் பையன். ஒரு சமயம் பிள்ளை மகனிடம் சொன்னர்: "உன் அம்மா ஒரு கெட்ட சொப்பனம் மாதிரி. கெட்ட சொப்பனத்தை யாராவது திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க விரும்புவார் களோ? என்னைப் பொறுத்த வரையில், அவளை நான் மறந்தாச்சு . . .' அவரிடம் அவன் அம்மா பற்றிப் பேசுவதை விட்டு விட்டான். இருந்தாலும், மனம் சுடுகாட்டுத் தன்மை பெற்று விடுமா என்ன? உணர்ச்சித் துடிப்புள்ள மனித இதயம் பாலைத் தன்மை பெறுவது சாத்தியமாகிவிடுமா? எனினும், தன் உணர்ச்சிகளைத் தன்னுள்ளேயே அடக்கிவிடுவதில் பயிற்சி பெற முயன்ருன் அவன். காலம் அவன் பாதையிலும் குறுக்கிட்டது. ஒரு நாள் அவன் பள்ளிக்கூடத்திலிருந்து தி ரு ம் பி வரும்போது, *ரத்னம்: என்று குழைவுக் குரல் கொடுத்தவாறு எதிரே வந்து நின்ருள் சண்பகம். என்னைத் தெரியலையா? மறந் துட்டியா, கண்ணு?’ என்று கேட்டாள். கம்மிய குரலில் சோகம் துளும்பியது.