பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 55 அவனுக்கு அவள் உருவம் நினைவில் நின்றது. அம்மா!" என்று ஏக்கத்தோடு, உணர்ச்சியோடு அவன் அழைத்தான். அவள் பாசத்தோடு அவனை ஆவிச் சேர்த்து’க் கட்டிக் கொண்டாள். தெருவையும், கும்பலையும் அவள் கவனிக்கவே! யில்லை. அவள் மகன்! அவனை அன்போடு தழுவிக்கொள் வதைக் கண்டு யார் என்ன சொல்ல முடியும்? அவனுக்குத்தான் என்னவோ போலிருந்தது. நான் என்ன குழந்தையா? என்று முரண்டினன். அவளுக்கு எவ்வளவோ பேச வேண்டும் என்று ஆசை. ஆயினும் பேச முடியவில்லை. குரல் கம்மியது. துக்கம் தொண்டையை அடைத்தது. வேதனை நெஞ்சில் கனத்தது. கண்கள், நீர் பனிக்க, அவனையே பார்த்துக் கொண் டிருந்தன-திராத தாகத்தோடு; அடக்கமுடியாத ஆசை யோடு. ஊம். எனக்குக் கொடுத்துவைக்கவில்லை!" என்று பெருமூச்செறிந்தாள் தாய். நானும் இங்கே தான் இருக் கிறேன். நீ இங்கே பெரிய பள்ளிக்கூடத்திலே படிக்கிறே என்கிறது ரெண்டு நாளேக்கு முன்னுடிதான் எனக்குத் தெரியும். உன்னைப் பார்க்கணும், பார்க்கணுமின்னு நெஞ்சு துடிச்சுது. நேத்து வந்து நின்னு கவனிச்சேன். நீ நாலஞ்சு பேர்களோடு போய்க்கிட்டிருந்தே கூப்பிட முடியலே. இன்னிக்கு எப்படியும் பேசிவிடுவதுன்னு வந்தேன். . . இந்தா, இதைச் சாப்பிடு’ என்று அவள் செய்து கொண்டு வந்திருந்த வடைகளைத் தந்தாள். தெருவிலே நின்னு எப்படிச் சாப்பிடுவது?’ என்று வாங்கி வைத்துக்கொண்டான் மகன். "நீ என் கூட வீட்டுக்கு வரணும். இன்னிக்கு வேண்டாம். இன்னொரு நாள் நானே கூட்டிக்கிட்டுப் போறேன்’ என்று சொன்ன அம்மா தொடர்ந்து வேண்டிக்கொண்டாள். *ரத்னம்! என்ன இப்படிக் கேட்கிருளேன்னு நெனச்சாலும் நெனச்சுக்கோ. ஆனல் அது அவசியம். நீ சத்தியம் செய்ய ணும். என்னை நீ சந்திச்சதாகவோ, நான் உன்னைக் கண்டு