பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 57 மன்னிக்க முடியாதுயின்னு ஒரே அடியாச் சொல்லி விட்டாங்க. நான் எப்படி அங்கே தலைகாட்ட முடியும்' என்று முனு முனுத்தாள் அவள். ‘அப்புறம் எப்படி எப்படியோ காலம் கழிஞ்சுது. இப்போ உன் தம்பிதான் எனக்குத் துணை என்ருள் சண்பகம். 'நீ அடிக்கடி இங்கே வரவேண்டாம், ராசா. அது அப்பாவுக்குத் தெரிஞ்சுபோகும். உன் அப்பா ரொம்பவும் கண்டிப்பான ஆளு. அவருக்கு மன்னிக்கவே தெரியாது. எந்தத் தப்பிதத்தையும் மன்னிக்க மாட்டார். ஆமா. என் விதி என்னோடு போகட்டும். அது உன் தலையிலும் விடி: வேண்டாம் என்று அவள் பொருமிள்ை. ரத்தினத்துக்கும் அழுகை வந்தது. எதுவும் தெளிவாகப் புரியாத குழப்ப நிலையிலே, அவன் மெளனமாக அவளே நோக்கியவாறு உட்கார்த்திருந்தான். பாவி பெத்தெடுத்தேனே தவிர, பிள்ளையை வளர்க்கக் கொடுத்து வைக்காதவள் ஆகிவிட்டேன். இப்போதாவது நீ சாப்பிடுவதைக் க ண் ணு ற ப் பார்க்கட்டும்!" என்று: அவனுக்குச் சோறு படைத்தாள். அன்பு வறுமையில் ஆழ்ந்துகிடந்த ரத்தினத்துக்குத் தாயன்பு இதமளித்தது. விழித்தெழுந்த சிறுவனின் விளையாட்டும், அவைேடு ஒட்டிக்கொண்ட தன்மையும் , ‘அண்ணன் , அண்ணன்' என்று கூறி வளைய வந்ததும் 'ஒற்றைக்காட்டு ஒரியாக' வளர்ந்திருந்த அவனுக்குக் குளுமை தந்தன. துரை என்ற அப்பையனிடம் அவனுக்கு இயல்பாகவே ஒரு பாசமும் பிரியமும் ஊறிப் பெருகின. "நான் எங்கே எப்படி இருந்தா என்ன? நீ நல்லாயிருக் கணும். உன் மனசிலே எனக்கும் உன் தம்பிக்கும் நல்ல இடம் இருக்குயின்னு அறிந்ததே எனக்குப் பெரியதிருப்தி. என் மனசுக்கு எவ்வளவோ நிம்மதி!' என்று சண்பகம், அவனே வழி அனுப்பும்போது கூறிள்ை.