பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蚤盘 மன்னிக்கத் தெரியாதவர் அவர்களாகச் சொல்வதைப் பொறுமையோடு கேட்டுக் கொள்வது, எவரிடமும் தூண்டித் துளேத்து எதுவும் கேட்ப தில்லை என்பதை சுபாவமாகவும் கொள்கையாகவும் கொண் டிருந்த ரத்தினம் அவளிடமும் வாய் திறந்து தன் சந்தேகம் எதையும் கேட்கவில்லை. தாயாளுல் என்ன , பிள்ளையானல் என்ன! மனிதர் ஒவ்வொருவரும் மற்றவருக்குப் புதிர்தான்!” என்று அவன் மனம் குறித்துக் கொண்டது. உருவமற்று, உயிரும் உணர்வும் அற்று, ஆயினும் ஒடிக் கொண்டேயிருப்பது எனும் தொழிலை ஒழுங்காகச் செய்து வருகிற காலம், உடலும் உயிரும் உணர்ச்சிகளும் பெற்ற மனிதர்களே எப்படி எப்படி எல்லாமோ ஆட்டிவைக்கிறது. கால ஓட்டம் சண்பகத்தின் வாழ்வையும் வெகுவாகப் பாதித்திருந்தது. கணவன் வீட்டிலும் வாழ முடியாதவளாய், பிறந்த வீட்டிலும் நிம்மதியாக நாளோட்ட வகையில்லாத வளாய், சுந்தரத்தை துணையாகவும் பலமாகவும் நம்பி தனி வாழ்வு தொடங்கிய அவள் வாழ்க்கையில் சோதனைகளும் வேதனைகளும் தான் அதிகமாகக் குறுக்கிட்டன. "காற்றடிக்கும் சோலையிலே கனி அடித்துத் திரிகின்ற செல்லப்பிள்ளை வர்க்கத்தைச் சேர்ந்தவன் அவன். பொறுப் பற்ற தன்மையில் வளர்ந்தவன். பொறுப்பு, கடமை உணர்வு, கடின உழைப்பு முதலியவைகளைப் பெரும் சுமை யாகக் கருதியவன். இருந்தாலும், உணர்ச்சி உந்துதலால் அவன் சண்பகத்தைக் காப்பாற்றுவதாக வாக்களித்து, ஏதோ சில ஏற்பாடுகளும் செய்தான். அக் கூட்டு வாழ்வின் புதுமையும் இனிமையும் சிறிது காலத்துக்கு அவனுக்கு உவகையும் உற்சாகமும் உழைக்கும் ஊக்கமும் கொடுத்தன. நாளடைவில் அவனுக்கு அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. இயல்பான சோம்பலும், கோயில் காளை சுபாவமும் மேலோங்கின. அவன் அடிக்கடி வெளியூர் பிரயாணம், வேலை மிகுதி, அவசர சோலி என்று சாக்குப்