பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

念懿 மன்னிக்கத் தெரியாதவர் சத்தினம் அவ்வப்போது அவளைக் கண்டு பேச வீடுதேடி வந்தான். தம்பியிடம் அவனுக்கு ஒட்டுதலும் உறவும் அதிக மாயிற்று. துரையை அவன் ஆசையோடு தேசித்தான். துரை பலவீனமான பையன். நோஞ்சான், நோஞ்ச மாட்டிலே சதா அரிப்பதுபோல பலவிதமான வியாதி களும் அவனைப் பிய்த்துப் பிடுங்கின. அதலுைம் அவன்மீது அண்ணனுக்கு ஒரு பரிவு ம் அனுதாபமும் ஏற்பட்டு வளர்ந்தன. - தம்பிக்குக் கதைகள் சொல்வதில் இன்பம் கண்டான் அண்ணன். தம்பியின் அறிவை விசாலமாக்கி, அவனிடம் உயர் பண்புகளை வளர வைக்கவேண்டிய பொறுப்புத் தனக்கு உண்டு என்று அவன் கருதினன். ஆகவே ஊர் உலகம் வீடு குடும்பம் பற்றி எல்லாம் அண்ணன் கதை கதை பாய் பேசின்ை. அப்பாவின் பெருமைகளே, வீரபராக்கிரமங் களே மகிழ்வுப் பெருக்கோடு வர்ணித்தான். அப்பாவை ஏதோ ஒரு காவியநாயகனுகத் தம்பி மதிக்கிற அளவுக்கு அண்ணன் அவரைப்பற்றிச் சுவையாகச் சொல்லி வந்தான். "அப்பாவை நான் பார்க்கவே இல்லையே, பார்க்கணு மின்னு ஆசையாயிருக்கே. என்னைப் பார்க்கணும்னு அப்பா வுக்கு எண்ணமே இராதா?’ என்று அந்தப் பிஞ்சு உள்ளம் ஏங்கியது. அம்மாவைத் தொன தொணக்கவும், அவள் ராட்சசி மாதிரிக் கதறினுள், களிர், சுளிர் என்று அறை கொடுத்தாள். அப்பனும் அப்பன்! பாராத குறைதான் உனக்குப் பெரிசாயிட்டுதாக்கும்? பேசாமல் கிட சவமே!’ என்று கத்தினுள். . பரிதாபத்துக்கு உரிய சண்பகம் சுந்தரத்தை நினைத்துக் கொண்டு, தன் கொதிப்பை, குமைதலை, ஆத்திரத்தை எல்லாம் அந்த அறியாப் பாலகன்மீது கொட்டினள். பாவம், அத்தப் பச்சிளம் உள்ளமோ அன்புடன் பழகிய அண்ணன் சித்திரித்த மகாப் பெரிய, சக்திவாய்ந்த கடவுளுக்கு அடுத்த படி என்று அதற்குத் தோன்றிய அப்பாவை அறிமுகம் செய்துகொள்ளத் தவித்தது. அதை அந்த அபலை உணர்ந் தானில்லை. . -