பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மன்னிக்கத் தெரியாதவர் அப்போது துரைக்குப் பன்னிரெண்டு வயசு, அவன் வாழ்வில் வெறுமை புகுந்தது. அதில் பசுமையும் குளுகுளுப் பும் நிரப்பக்கூடிய சக்தி அப்பாவுக்கு உண்டு என்று அவன் எண்ணிஞன். இந்த அம்மாதான் 'பெரிய இது மாதிரி’’ காரியங்களைச் செய்துக்கிட்டு, எல்லாத்தையும் கெடுத்துக் குட்டிச்சுவர் பண்ணிக்கிட்டிருந்தா. இப்படிக் கஷ்டப்படு ருேம்னு அப்பாவுக்குத் தெரியப்படுத்தவேயில்லை. அப்பா வுக்குத் தெரிஞ்சிருந்தால் இதுமாதிரி விட்டு வச்சிருப்பாங் களா? என்றுதான் அந்த அறியாப் பையனல் எண்ண முடிந்தது. "அப்பாவைப் பார்க்க வேண்டும்’ என்ற ஆசையை அவன் அண்னனிடம் சொன்ஞன். அவசியம் போகலாம். எனக்கு லீவு நாள் வரட்டும்’ என்று ரத்தினம் கூறினன். காலத்தை ஏலத்தில் விட்டுக்கொண்டிருப்பது பையனுக் குப் பிடிக்கவில்லை. அவன் நல்ல காலம் சீக்கிரமே வரவேண் டும் என்று ஆசைப்பட்டான். அதனல் தனியாகவே தந்தை யைப் பார்க்க கிளம்பிவிட்டான். அந்த ஊர் எங்கே இருக் கிறது, வீடு எந்தத் தெருவில் எப்படி உள்ளது, அப்பா எப்படி இருப்பார் என்பதெல்லாம்தான் அவனுக்குத் தெரி யுமே! அண்ணன் தெளிவாக எத்தனையோ தடவைகள் சொல்லவில்லையா? சந்தேகம் வந்தால், விசாரித்துத் தெளிவு பெற வாய் இல்லையா என்ன? எனவே அவன், அண்ணனுக்குக் கோணல் மாணலாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, துணிச்சலைத் துணை கொண்டு தனியாகக் கிளம்பினன். மகராஜபிள்ளை அன்று கண்ட மேனி அழியாமலே: தானிருந்தார். காலவெள்ளம் கூடக் கரைத்து அரிக்க முடியாத கருங்கல் பாறையில் செதுக்கி எடுத்த உருவங்கள் போல் சில பேர் இல்லையா? அவரும் அந்த இனம்தான். அவர் குணங்களிலும் காலம் எவ்வித மாறுதலும் செய்து விடவில்லை. - -