பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

粉登 மன்னிக்கத் தெரியாதவர் ஒ:’ என்ருர் அவர், அலட்சியமாக. அந்தக் கேடு கெட்டவ பெத்த தேவாங்கா?’ என்ருர் குத்தலாக, போடா போக்கத்தவனே! உன் அம்மா ஊர் மேலே போயி உன்னைப் பெத்திருக்கா. உன் அப்பன் எந்தப் பரதேசிப் பயலோ! இனிமேலே என் பேரை உன் வாயாலே கூடச் சொல்லாதே. போ போ, அந்த அடிச்சரியா போன இடத்துக்கே நீயும் போ!' என்று விரட்டினர். பையனுக்கு எல்லாம் இருண்டுவிட்டதாகவே தோன்றி யது. இந்த விதமான வரவேற்பை, இப்படி ஒருபேச்சை, அவன் சர்வ சக்தி வாய்ந்த அப்பாவிடமிருந்து எதிர் பார்க்கவேயில்லை. அவன் தள்ளாடித் தடுமாறித் தெருவில் இறங்கி நடந்தான். அழுதுகொண்டே நடந்தான். நான் செத்துப்போவதே நல்லது. நான் செத்துத்தான் போக ணும் என்று அவன் மனம் கூறுத்தியது. அப்போதுதான் வந்துபோன ரயிலிலிருந்து இறங்கிய ரத்தினம் அவசரம் அவசரமாக நடக்க ஆரம்பித்தபோது, வெறிபிடித்துவன் போல் ரயிலை நோக்கி ஓடும் துரையைப் பார்த்துவிட்டான். தம்பீ. தம்பீ! ஏ. துரை!” என்று கூவிக் கொண்டு அவனைப் பிடிக்கப் பாய்ந்தான். தம்பியைத் தேடி வந்தவன்தான் அவன். அண்ணனேக் கண்டதும் துரையின் இதய வேதனை தாங்க முடியாதது ஆயிற்று. அவன் விம்மி விம்மி அழுது கொண்டு அண்ணன் காலைக் கட்டிப் பிடித்தான். "ஏன்? என்ன நடந்தது? ஏன் இப்படி அழுறே? என்று ஆதரவாய் விசாரித்தான் ரத்தினம். கேடுகெட்டவ பெத்தவனே...எந்தப் பரதேசிக்குப் பொறந்தியோ...நான் உன் அப்பா இல்லே... துரை விக்க லுக்கும் விம்மலுக்குமிடையே சொற்களை சிரமத்தோடு உச்சரித்தான். போடா, போ. அடிச்சரியா கிட்டேயே போயின்னு..."