பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密密 மன்னிக்கத் தெரியாதவர் சாயங்காலம் ஆயிற்று. அந்தி இருள் பரவும் வேளையும் வத்தது. 'அண்ணுச்சி, உங்க மகன் இங்கே வந்தான என்று கேட்டுக்கொண்டே, நடுத்தெரு மாணிக்கம் பிள்ளை வந்தார். "என் மகளு?’ என்று முறைத்தார் பிள்ளை. உங்க பதினெட்டு வயசு மகன் ரத்தினம்...' என்று இழுத்தார் மற்றவர். "இல்லையே...ஏன்? அவர் நெஞ்சை வலித்தது. மாணிக்கம் பிள்ளை ரயிலடியில் நடந்ததைச் சொன்னுர், அந்த ரயிலில்தான் அவரும் வந்திறங்கினர். அவருக்கு அங்கு திகழ்ந்த உணர்ச்சி நாடகம் புதுமையாக இருந்தது. மனசுக் குக் கஷ்டம் தருவதாகவும் இருந்தது. இரண்டு பேரும் ரயிலேறி நகரத்துக்குப் போனதைப் பார்த்துவிட்டுத்தான் அவர் ஊர் வந்து சேர்ந்தார். அவர் சொல்லச் சொல்ல, மகராஜபிள்ளைக்குத் தம்முள் எதுவோ ஒன்று சரிந்து, தமது பலம் பூராவும் நழுவிப் போவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. என் ஐயா என்று வேதனையோடு கூறி, கட்டிவில் சாய்ந்தார் பிள்ளை. சிறிது நேரம் காத்திருந்த மாணிக்கம் பிள்ளை. அவர் தனிமையில் இருப்பதே நல்லது எனக் கருதி அங்கிருந்து போய்விட்டார். மகராஜபிள்ளைக்கு எல்லாமே சூன்யமாகிவிட்டதுபோல் பட்டது. வாழ்க்கையே தி டீ .ெ ர ன் று வெறுமையாய், பாழாய், அர்த்தமற்றதாய் மாறி இருண்டுவிட்டது போலிருந் தது. மன்னிக்கத் தெரியாதவர். . . மன்னிப்பு பெறத் தகுதி யில்லாதவர்...அப்படியா சொன்னன்? என் மகன சொன் ஒன்? அவர் இதயம் கனத்தது. உள்ளம் வெதும்பியது. அவர் பெருமூச்சு விட்டபடி கிடந்தார்.