பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ சூழ்நிலையில் அமைதி கொலுவிருந்தபோதிலும் அவன் உள்ளத்திலே அமைதி இல்லை. கசப்பும் வெறுப்பும், ஒருவித விரக்தியும் மண்டிச் சுழன்றன. அங்கு. -வெறுப்பு, சுற்றுப்புறத்தின்மீது... ம னித ர் க ள் மீது...அவர்களின் சின்னத்தனங்கள்மீது . .த ன் மீது கூட. அவனுக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டிருந்தது. பழமையின் பேராலும், பண்பாட்டின் பேராலும், நீதி-நியாயம்-சமூக தர்மம் முதலிய கட்டுப்பாடுகளின் பேராலும் தனிமனிதர் களேச் செயலற்றவர்களாய், கோழைகளாய், துணிச்சல் பெற முடியாதவர்களாய் மாற்றிவிட்ட-இனியும் மா ற் ற ப் போகிற-அமைப்பு முறையின் மீது அவனுக்கு மிகுந்த கசப்பு ஏற்பட்டிருந்தது. திடீரென்று பிறந்த கசப்பு அல்ல. அது. அவனுக்கு இப் பொழுது முப்பத்திரண்டு வயதாகிறது. பதினறு-பதினேழு வயசுவரை அவனும் மனேகரமான இன்பக் கனவுகளிலே மூழ்கி கிடந்தான். இனிமை நிறைந்த எதிர்காலம் பற்றிய பசுமை யான சித்திரங்களைத் தீட்டி மகிழ்ந்தது அவன் மனம். மகத் தான நம்பிக்கை உறைந்திருந்தது அவனுள். நாட்கள் தேயத் தேய, அவனுடைய வயது வளர வளர, வருங்காலம் பற்றிய பகமைகள் எல்லாம் நிகழ்காலத்தின் அனுபவ வெயிலிலே காய்ந்து கருகித் தீய்ந்து போயின. நம்பிக்கை வறட்சி அவனுள்ளத்தில் தலைதுாக்கி வளர்ந்தது. திறமை, உழைப்பு, ஊக்கம், உற்சாகம் மட்டும் இருந் தால் போதாது, ஒருவன் முன்னேறுவதற்கு, நேர்மை, நியாயம், உண்மை, மனித தர்மம் என்று பேசப்படுபவை எல்லாம் வெறும் பேச்சுக்கும் அலங்கார எழுத்துக்கும் எடுப் பாகத்தான் இருக்கின்றன. ஆயினும் அவை வாழ்விலே எவனேயும் உருப்பட வைத்ததில்லை. ஆனல், தவறுகள் என்று கருதப்படுவனவற்றை எல்லாம் துணிந்து செய்கிறவர்கள்-பாவங்கள் என்று போதிக்கப்படுபவற்றை விழிப்பு உணர்ச்சியோடு கையாள் கிறவர்கள்-சின்னத்தனங்கள் எனக் குறை கூறப்படுகின்ற