பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மன்னிக்கத் தெரியாதவர் வைகளைக் கூசாது செயல்புரிவோர் பிரமாதமாக வாழ முடிகிறது இன்றைய சமுதாயத்திலே. . மூப்பு, பிணி, சாக்காடு ஆகியவற்றைக் கண்டு மனம் குமைந்து, வாழ்வில் வெறுப்புற்று, விடுதலைக்கு வழிதேடத் தானே தவித்தது சித்தார்த்த உள்ளம்? அவனும், அவனைப் போன்றவர்களும் என்ன வழிகள் கண்டுபிடித்திருந்தாலும், அவ்வழிகளில் எதுவும் வாழ்க்கை முறையிலே மாற்றம் புகுத்திவிடவில்லை. உலகத்தில் உண்மை ஒளி பரவ வில்லை. . . . மாதவன் இவ்வாறு அடிக்கடி எண்ணிஞன். அவனிடம் சிந்திக்கும் ஆற்றல் இருந்தது. அறிவுப் பசி பெற்ற அவன் கண்டதை எல்லாம் படித்துப் பொழுதுபோக்கிக் கொண் டிருந்தான். இவ்விரண்டு பண்புகளும் எவனேயாவது வெற்றி கரமாக வாழவைத்திருக்கின்றனவா என்ன? ஆளுல் மன உளேச்சல் ஏற்படுத்தாமல் விடுவதுமில்லையே? மாதவனும் இத்தகைய மனே வியாதியினல் பீடிக்கப் பட்டு, அமைதி இழந்து தவித்தான், படிப்படியாக வெறுப்பு வளர்ந்து வந்தது. வெறுப்பை உருவற்ற சமுதாயத்தின் மீதும், அது போற்றிப் பாதுகாக்கின்ற-கண்ணுக்குப் புல இகைாத-விலங்குகள் மீதும் தீவிரமாகக் கொட்டினன். அது மட்டும் போதாது; சமூகத்தைத் தண்டிக்க வேண்டும்; அதற்குத் தகுந்த தண்டனை கொடுக்கக்கூடிய தகுதியும் ஆற்றலும் துணிச்சலும் தனக்கே உண்டு என அவன் நம்பினன். எப்படி எப்படிச் செயல்புரியவேணும் என்று தீர்மானித்து திட்டங்களிட்டு, நெஞ்சை உறுதிப்படுத்தி வந்தான் அவன். -வாழ்க்கை ஒரு போராட்டம் என்று கருதப்படுகிறது, போர் என்ருல், அதில் வெற்றி பெறுவதற்கு எவ்வித யுக்தி களையும் தந்திரங்களையும், ஆயுதங்களையும், சூழ்ச்சிகளையும் அனுஷ்டிக்கலாம் அல்லவா? மாதவன் இந்தரீதியில்தான் சிந்தித்தான். பதினைந்து வருடகாலம் சிந்தித்தான். ஒவ்வொரு பிறந்த நாளின்