பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

写2 மன்னிக்கத் தெரியாதவர் இயல்புக்கு முரணுன சமாதி நிலையையும் பளிச்செனப் புலப் படுத்தியது. -அடைபட்டுக் கிடக்கின்ற வீடுகளுக்குள் எல்லாம் உறக்கமும் அமைதியும் கவிந்து கிடக்கவேனும் என்கிற அவசியம் இல்லவே இல்லை. சோக நாடகங்களும், இன்பக் கதைகளும், பயங்கர அனுபவங்களும் நிகழ்ந்து கொண் டிருக்கலாம். மெதுவாக நடந்து சென்ற மாதவன் பெருமூச்செறிந் தான். அவன் வாழ்வின் வெறுமையும், அதனல் எழுந்த ஏக்கமும் அதில் பிரதிபலித்தன. தன் நினைவுகளே தன்னைச் சுமையாக அழுத்த, தலைகுனிந்தபடி நடந்த அவனே "அத் தான்!” என்ற ரகசிய அழைப்பு நிமிர்ந்து பார்க்கச் செய்தது. ஒரு வீட்டில், கதவைச் சிறிதே திறந்துவைத்துக் கொண்டு மறைந்தும் மறையாமலும் காட்சிதந்த பெண் நிலவு அவன் முகத்தில் மலர்ச்சி ஏற்படக் காரணமாயிற்று. அவன் ஏன் என்ற கேள்வியைப் பார்வையில் நிறுத்தினன். தோட்டத்துப் பக்கம் வாங்க, உங்களிடம் முக்கிய விஷயம் பேசனும் என்று அவள் மிக மெதுவான குரலில் சொன்னுள். அவன் தலை அசைவைப் பெற்றதும், கதவை அடைத்துத் தாழிட்டுவிட்டுப் போளுள். மாதவன் ஒரு கனம் தயங்கி நின்ருன். அங்கும் இங்கும் பார்வையை எறிந்தான். சூழ்நிலையில் மாறுதல் எதுவும் ஏற் பட்டிருக்கவில்லை. அவன் நிதானமாக வீட்டின் பின்பக்கம் வந்து சேர்ந்த போது, அவள் அங்கே நிழல் அடர்ந்த மரத்தடியில் அவனுக் காகக் காத்து நின்ருள். - என்ன காந்தி, என்ன விஷயம்? அவன் குரல் அவ னுடைய எச்சரிக்கையான சுபாவத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் அந்த யுவதி மெதுவாகப் பேசு' என எச்சரிக்க விரும்பியவளாய், உஷ்!" என்று ஒலி செய்து ஒரு விரலைத் தன் உதடுகள்மேல் பதித்துக் காட்டினள்.