பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨盛 கன்னிக்கத் தெரியாதவர் அடைய முடியவில்லை, அத்தான். நீங்களும் நானும் எவ் வளவோ எண்ணினுேம், ஆசைப்பட்டு எதிர்பார்த்தோம்...' எதிர்பார்க்கிறவர்கள் ஏமாறுவதும், ஆசைக்குப் பங்கம் ஏற்படுவதும் வாழ்க்கையில் சகஜந்தானே, காந்தி: அவன் அவள் முகத்தில் படபடக்கும் விழிகளை எதிர் நோக்க விரும்பாமல், பசிய இலை ஒன்றில் பட்டு, பளபளத்துச் சிதறுகின்ற வெள்ளி நிலவொளியைக் கூர்ந்து கவனித்தான். அவள் மார்பு விம்மித் தணிந்தது. அத்தான், உங்களுக்கு என்னிடம் ஆசை இல்லையா?" என்று உருக்கமாகக் கேட்டாள் அவள்.

  • அப்படி நான் சொல்லவில்லையே!”

பின் ஏன் இப்படி விரக்தியோடு பேசுகிறீர்கள்? காந்தி, என் விரக்திக்கும் வேதனைக்கும் வெறுப்புக்கும் இதுதான் காரணம் என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? எனக்கு எல்லோர்மீதும், எல்லாவற்றின்பேரிலும் பெரும் வெறுப்பு. . .' "என் மேல் கூடவா?’ என்ற கேள்வியை அவன் எதிர் பார்க்கவில்லை. அது வெடித்துவிட்டதும் அவன் திகைத் தான். "என் நினைவிலே இனிமையாய் நிலைத்திருக்கக்கூடிய பெருமை உனக்கு மட்டுமே உண்டு காந்தி, வறண்ட கோடை போன்ற என் வாழ்க்கையில் உன் அன்புதான் குளிர் தரும் நிழலாக விளங்கியது; இனி உன் நினைவு எனக்குத் துணை நிற்கும்’ என்ருன் அவன். 'நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே, அத்தான்." ‘விடிந்தால் தெரியும் வெளிச்சம். நாளைக்கோ, மறு நாளோ, என்ருே எல்லாம் தானுகப் புரிந்துவிட்டுப் போகிறது: - - பெரியவர்கள் எனக்காக நிச்சயித்துவிட்ட கல்யாணத் தைக் குறிப்பிடுகிறீர்களா?