உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 இருளில் ஒளி யுள்ளார். தனக்கு அறிவு நிர்ம்பிவிட்டது என்ற செருக்கினையும், தனக்கு ஆற்றல் பெருகிவிட்டது என்ற தருக்கினையும் உடையவனுக மனிதன் இப் பொழுது திரிந்துகொண்டு இருக்கிருன். மனிதன் தன் நெஞ்சிற் பொய்க்காமல், அற மனிதனுக வாழ் தல் வேண்டும் என்றும்; அவனைச் சுற்றிலும் பல் வேறு உயிர்ப்பொருள்களிடத்து இரக்கமும் நேய மும் கொள்ளுதல் வேண்டும் என்றும் அவர் வற் புறுத்தியுள்ளார். - நாகரீகம் என்பது படித்த மக்கள் சிலருடைய தனி உரிம்ை என்றும், படியாத பாமர மக்கள் படித்தவர் நாகரீகம் அடைதற்கு வாயிலாக உள் ளார்கள் என்றும் கருதுஞ் சிலருடைய கருத்து சுவைட்சருக்கு அறவே பொருந்துவது இல்லை. உலகில் வாழும் ஒவ்வொருவரும் தமக்காகத் தமக் காக வாழும் உரிமை உடையவர் என்பதனையும், ஒவ்வொருவரும் தத்தம் அளவில் மேன்மை உடையவராகப் படைக்கப்பட்டுள்ளார் என்பதனை யும், ஒருவர் உயரத்தில் ஏறுதற்குப் பிறர் படிகள் போலப் படைக்கப்பட்டுள்ளாரல்லர் என்பதனை யும், ஒருவர் வாழ்வதற்குப் பிறர் நோகவேண்டும் அல்லது சாகவேண்டும் எனப் படைக்கப்பட் டுள்ளாரல்லர் என்பதனையும் சுவைட்சர் வற் புறுத்தியுள்ளார். இக்கருத்துக்கள் எல்லாம் ' உயிரின் தொழுதகைமை” என்ற அவருடைய கொள்கையால் விளக்கம் பெறுகின்றன. புதியனவாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல் வேறு பொருள்களால் மனிதன் ஒருவன் மற்ருெரு