உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டோரம் - 25 யினுல் வருந்தி, அசைந்து அசைந்து சென்று கொண்டிருந்த காட்சியைக் கண்டவுடன் சுவைட் சர் உள்ளம் உருகினர். குதிரைகளுக்கு அள்ளி யிடும் புல்லிற்காக அவற்றின் ஆவியைக் கொள் வது அழகாமோ என்று நினைத்தார். குதிரைகள் பேசுவதாய் இருந்தால், பற்றி முதுகினில் ஏறிக்கொள்வீர்-எம்மைப் பட்சிகள் போலப் பறக்கச் செய்வீர் சற்றும் இரக்கம் இலாதவரோ-நீங்கள் சாத்திரம் கற்ற பயன் இதுவோ? - என்றும், -

மேடு பள்ளங்களில் ஓடவேண்டும்-வெய்ய

வேனில் மழைகளில் ஓட வேண்டும் காடு செடிகளில் ஒட வேண்டும்-இந்தக் கட்டங்கள் யாரிடம் சொல்வோம் யோ!' என்றும் கூறியிருக்கும். சுமைக் குதிரைக்கும் இரக்கம் காட்டவேண்டு மென்று சொல்லி, வண்டியில் உட்கார்ந்திருந்தவர் களைக் கீழே இறக்குவித்து, வண்டியைத் தள்ளும் படி சுவைட்சர் சிலருக்குக் கற்பித்தார்; கற்பித்த தொடு அமையாது தாமும் உடன் நின்று கைகொடுத்து உதவிஞர். தக்காரிலிருந்து மேலும் ஆப்பிரிக்கன் கரையோரம், மிளகுக் கரையோரம், தந்தக் கரையோரம், என்றவாறு பெயர் பெற் றிருந்த பல கரையோரங்களைத் தாண்டி லோபஸ் முனையைக் (Cape Lopez) கப்பல் அடைந்தது. அங்கிருந்து ஒகோவே ஆற்று வழியே செல்லுதல் வேண்டும். பிரஞ்சு எல்லையிலிருந்து புறப்பட்டு