உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 . காட்டோரம் மூன்று வாரங்கள் கழித்து, ஒகோவே ஆற்றங் கரைக்குச் சுவைட்சரும் அவர் மனைவியும் சென் ருர்கள். ஒகோவே ஆற்றின் வழியாக லாம்பரீன் செல் லுதற்கெனத் தனியாக ஆற்று நீராவிப் படகு உண்டு. தாம் கொண்டுவந்துள்ள எழுபது பெட்டி கனே அப்படகினில் ஏற்றுதற்குச் சுங்கச் சாவடி யில் தடை இருக்கும் என்று கேள்வியுற்றுச் சிறிது நேரம் சுவைட்சர் வருந்திஞர். எனினும், சுங்க அலுவலர்களுக்குத் தம்முடைய நிலையைத் தெரிவித்தவுடன், அவர்களும் இரக்கம் காட்டிச் சுங்கம் நிறைய விதிக்காது விட்டனர். நூற்றைம் பது மைல் தொலை ஆற்றில் எதிரேறி, ஆப்பிரிக்கா செல்லுதல் வேண்டும். ஒருநாட் காலை ஒன்பது மணிக்குப் புறப்பட்டவர்கள் மறுநாள் முற்பகல் பத்து மணிக்கு லாம்பரீன் அடைந்தார்கள். எனினும், லாம்பரீன் குன்றுகள் தோன்றினவே அன்றி, மருத்துவச்சாலை உள்ள இடம் இன்னுந் தொலைவில் இருந்தது. பக்கத்து ஓடை வழியாக வேருெரு சிறு படகினில் அவண் செல்லுதல் வேண்டும். அவர்களுடைய வருகையை எதிர் நோக்கிப் பள்ளிக்கூடத்துச் சிறுவர்கள் பலர் வந்து காத்து நின்றனர். இரண்டு தோணிகள் போட்டி போட்டுக்கொண்டு அங்கு வந்து காத் திருந்தன, ஒரு தோணியில் சிறுவர்கள் சிலர் இருந்தார்கள். மறு தோணியில் அவரினும் வய துடைய மாணவர்கள் சிலர் இருந்தார்கள். இவ் விரு தோணியரும் தமக்குள் போட்டியிட்டுக்