48 போர்க்காலம் முன்னல், கோயிலுக்குச் சென்று அங்குள்ள பழைய இசைக்கருவியினை இசைக்கலுற்ருர். அவர்க்குப் பழைய பியானுேக்களைச் செப்பனிட் டுப் பயன்படுத்துவதிற் பேரார்வம் உண்டு. நெடுங் காலமாக மண் ஏறிப் புழுதி படிந்து பாழ்பட்டுக் கிடந்த பியானேவை அவர் துடைத்துச் செப்ப னிட்டு வாசித்து மகிழ்ந்தார். கோவிலில் அவ் விசைக் கருவியினை வைத்திருந்த மாடிக்கு ஏறு தற்கு அமைந்த ஏணியின் படிகள் பழுதுபட்டிருந் தன. அதனல், படிகளில் ஏருமல், நேரே சுவர் ஏறிப் பியானுேவை இயக்கிவிட்டுக் கீழே இறங்கிய தும், அவ்வூர் நகர மன்றத் தலைவரை நோக்கி, ' இசைக் கருவிகளை இயக்குதற்கு ஆட்கள் கிடைக் கலாம்; ஆளுல் ஏணியின்றி ஏறுதற்கு என்னைப் போல் ஆட்கள் கிடைக்கமாட்டார்கள் ' என்று வேடிக்கையாகக் கூறினர் என்பது தெரியவரு கிறது. புதுப்புது இசைக் கருவிகள் உண்டாக்கு வதைக் காட்டிலும், பழைய இசைக்கருவிகளைச் செப்பனிட்டுப் புதியன ஆக்குவது நல்லது என்று சுவைட்சர் நம்பினர். அதனல், அவரைப்பற்றி வேடிக்கையாகச் சிலர் பேசத் தலைப்பட்டார்கள். ' இவர் ஆப்பிரிக்காவில் பழைய நோயாளர்களைக் காப்பாற்றுகிருர் ; ேேராப்பாவிலே பழைய இசைக்கருவிகளைக் காப்பாற்றுகின்ருர் ' என்று பலர் பேசிக்கொண்டனர்.
பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/52
தோற்றம்