உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 6. மன்னுயிர்க்கு அன்பு 1913-இல் முதல்முறையாக டாக்டர் சுவைட் சர் லாம்பரீனிற்குப் போய் ஆப்பிரிக்க மக்கட்குப் பணி செய்தார்.1924-இல் மீண்டும் அங்குச்சென்று டாக்டர் சுவைட்சர் மூன்று ஆண்டுகள் தங்கிச் சிறந்த பணியாற்றலுற்ருர், திரும்பச் சென்றதும், பழைய மருத்துவ மனை ஓரளவு பாழடைந்து இருந்ததைக் கண்டு பதறிஞர். வழிநெடுகப் புல்லும் பூண்டும் முளைத்திருந்தன. மருத்துவ மனையின் கூரைகளெல்லாம் விழுந்து கிடந்தன; சுவர்களோ இடையே விழுந்தறுவாயில் இருந்தன. எனினும், மருத்துவர் வந்தாரே என மகிழ்ந்து, வரவேற்கும் வெள்ளையர் கூட்டமும் நீக்ரோவர் கூட்டமும் வெள்ளம்போல் இருப்பதைக்கண்டு சுவைட்சர் மகிழ்ந்தார். 8ரோப்பாவிலும் அமெரிக் காவிலும் இரண்டு உலகப்பொருட்காட்சிகள் நிகழும் காரணத்தால், மரம் அறுப்பதற்காக ஆப்பிரிக்க நீக்ரோவர்கள் வணிகரிடம் வேலைக்குச் சென்றுவிட்டபடியால், கூரை வேய்வோர் கிடைத் தல் அரிதாக இருந்தமையைச் சுவைட்சர் அறிந் தார்; சில நாழிகை நேரத்திற்குள்ளாகப் பக்கத்து ஊர் ஒன்றிற்குப் படகிற் சென்று, அறுபத்து நான்கு ஒலைக் கற்கள் கூரைக்காக வாங்கிக் கொண்டு திரும்பினர். திரும்பி வரும்பொழுதோ கனத்த மழை பெய்தது. மருத்துவ மனைக் கூரையை வேய்தற்கு மூவாயிரம் ஒலைக் கற்கள்