வயது முதிர்ந்த நிலையில் 65 லாம்பரீன் மருத்துவ மனையில் நாடொறும் கடன்கள் எவ்வாறு ஆற்றப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளுதல் நல்லது. காலை 6.30 மணிக்கு நோயாளர்களும் பிறரும் தோன்றுவார்கள். நோயா ளர்கள் அவரவர்க்கு உரிய நோய் தீரும்பொருட்டுக் கவனிக்கப்படுவர். மருத்துவ இல்லங்களிற் சிறப்பு. வேலை பார்ப்பவர்கள் டாக்டர் சுவைட்சருடைய ஆணைகளை எதிர்பார்த்து நாடொறும் 6-30 மணிக்கு ஓர் இடத்திற் சந்திப்பர். டாக்டர் சுவைட்சர் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய பணி யாது என அவர்களுக்குத் தெரிவிப்பார். மருத்துவ மனை வேலைகள் முடிந்த பிற்பாடு, நண்பகலில் யாவரும் உணவிற்குச் செல்வர். ஆப்பிரிக்க மக்கள் தம் உணவைத் தாமே ஆக்கிக்கொண்டு உண்பர். பிற நாடுகளிலிருந்து வந்திருக்கக்கூடிய பார்வையாளர்கள் டாக்டர் சுவைட்சரொடு உடன் உண்பர். நண்பகல் உணவிற்குப் பிறகு, யாவரும் ஒரு மணி நேரம் ஓய்வு அல்லது உறக்கம் கொள்வது உண்டு. மிக்க வெப்பம் வாய்ந்த நாடு ஆதலால், ஆப்பிரிக்காவிற் பகலில் ஓய்வுகொள் ளுதல் என்பது யாவர்க்கும் ஒத்த ஒரு பழக்கம். பிற்பகல் இரண்டு மணிமுதல் மாலை ஆறு மணி வரையில் மறுபடியும் யாவரும் வேலைசெய்வர். ஆறு மணிக்குப் பிறகுதான், சுவைட்சர் புதியவராக வந்துள்ள பார்வையாளர்களைக் கண்டு பேசுதல் உண்டு. இரவு உணவிற்குப் பிறகு இன்னிசைக் கருவியைக்கொண்டு இனிய துதிப் பாடல்களை அவர் இயக்குவார். பின்னர், பார்வையாளர்கள்
பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/69
தோற்றம்