உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயது முதிர்ந்த நிலையில் 71 நில்லாது, பிற உயிர்கள் யாவற்றினுடைய தீமை யையும் போக்க வழி தேடுவதுதான் அறிவுடைமை என்று திருவள்ளுவர் வற்புறுத்தி இருப்பதைப் போலச் சுவைட்சரும் வற்புறுத்தினர். தன்னுயிர்க்கு இன்குமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்ன செயல் ?? என்ற திருவள்ளுவர் வாக்கினை மொழிபெயர்ப்பில் அறிந்துள்ளார் சுவைட்சர். அவரது விரிவுரையில் எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின் தெய்வ அருட்கருணை செய்வாய் பராபரமே ? என்ற தாயுமானவர் கருத்தின் தொனி இருந்தது. மனிதன் தன் அளவில் நல்ல மனிதனுக, முழு மனிதனுக, குற்றமற்ற மனிதனுக ஆதல் வேண்டு மென்று ஏசுநாதர் வற்புறுத்தியதையும், மக்களுக்கு ஆன்ம வகையிலும் பொருள் வகையிலும் புதிய இனிய நல்ல மேலான நிலைமைகளை உண்டாக்கித் தர வேண்டுமென்று பதினரும் நூற்ருண்டு மறு மலர்ச்சியாளர்கள் கூறியதையும் ஒன்ருகப் பிணைத்து ஓர் அறவழி அமைக்கவேண்டுமென்று சுவைட்சர் வற்புறுத்தினர். கி. மு. 16, 17-வது நூற்ருண்டுகளில் இத்தகைய எண்ணத்தால் மக்களை வதைத்தலும், மாய மந்திரங்களில்ை தீமை செய்தலும் ஆகிய பொருத்தமற்ற செய்திகள் தடைப்படுத்தப்பட்டதை எடுத்துக் காட்டினர். ஒருவருக்கு இயல்வதைச் செய்வதோடு அறம் நின்றுவிட்டது என்று கருதாமல், ஒருவரால்