உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞரின் அருங்கருத்துக்கள் 79 என்று கருதினர். இன்னுதன செய்தவர்க்கும் இனியன செய்யவில்லை என்ருல், இனியன செய்யா தவரைச் சால்புடையர்ர் என்பது எப்படிப் பொருந்தும்? தீமைகள் செய்தவரைத் தண்டித்தல் என்பது அவர் “ இந்நன்மையை இவரிடமிருந்து பெறுதற்குத் தகுதியுடையேன் அல்லேனே' என்று கருதி நாணித் தலைகுனியும் அளவிற்கு நன்மை செய்துவிடுதல் என்று கூறிக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது; செயலிற் காட்ட வேண்டும் என்ருர். பிறர் செய்த குற்றத்தைப்பொறுத்தல் பேரறம். ஒருவர் மற்ருெருவர் செய்த குற்றம் ஒன்றைப் பொறுத்தல் எளிது. ஒருவர் சிலச் செய்த சில குற்றங்களைப் பொறுத்தல் அதனின் அரிது. ஒருவரே பலர் பன்முறை செய்த பல குற்றங்களைப் பொறுப்பது என்பது மிகவும் கடினம். கடினமான செயலைச் செய்வதில்தான் பெருமை உளது. எல்லோர்க்கும் எளிய செயலைச் செய்வதைவிடப் பலருக்கு அரிய செயலைச் செய்தலே சிறப் புடைத்து. ஆதலால், ஒருவர் மற்ருெருவரை எத் தனை முறை மன்னிக்கலாம் என்று க்ணக்குப் பார்த்து மன்னிப்பது போதாது என்பது சுவைட் சர் கருத்து. கடவுளிடத்து நம் குறைகளுக்காகவும் குற்றங்களுக்காகவும் எத்தனை முறை மன்னிப்புக் கேட்கவேண்டிய நிலையில் நாம் உள்ளோம் என் பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண் டும் என்பது அவர் விருப்பம். கடவுள் நம்மை ஒரு முறையா மன்னிக்கிருர் !. பல முறைகள் மன்