உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அறிஞரின் அருங்கருத்துக்கள். ஒருவர் முதலில் தம்முடைய குற்றத்தை நீக்கிக் கொள்ள வேண்டும் என்றும், பிறகு பிறருடைய குற்றத்தை அவரிடத்தில் நேரே சொல்லி நீக்கு தற்கு முயலுதல் வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறினர். அவ்வாறு பிறரைத் திருத்த முயலு பவர்கள் தத்தம் தீமை நீக்கப்பெற்ற பெரியவர் களாக இருத்தல் வேண்டும் என்பது அவரது நம்பிக்கை. பிறர் குற்றங்களை, அவர் இல்லாத இடங்களில் எடுத்து விரித்துரைப்பது பெருந் தன்மை ஆகாது. பிறருடைய தீமைகளை அவர் இல்லாத இடத்தில் எடுத்துச் சொன்னுல், அவர் கள் சொல்வது தப்பு என்ருே ஒப்பு என்ருே பேசிப் பதிலுரைக்க முடியாத நிலையில் அவர் இருப்பர் அல்லரோ? அதனல், பிறர் தீமையை எடுத்துச் சொல்லாதவர்களே நல்லவர்கள் என்றும், குணம் நிரம்பியவர்கள் என்றும் சொல்லத் தக்கவர் எனத் திருவள்ளுவர் கருதினர். தவம் செய்பவர்கள் உண்டி கொள்ளாமல்கூட நோற்பவர்கள் ; ஆத லால், பெரியவர் எனத் தக்கவர்கள் என்ருலும், அவர்கள் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக்கொள்ளும் பண்பு உடையவர்கள் அளவு பெரியவர்கள் அல்லர். பிறர் ஏதாவது கடுஞ்சொல் சொன்னல், ஒருவர்க்குக் கோபம் உண்டாவது இயல்பு. அந்தக் கோபத்தைத் தடுத்துக்கொள்ளும் அளவிற்கு ஒருவர் பழக்கம் செய்து கொண்டு விடுiாரேயானல், அவர் மாபெரும் மனிதர் என மதிக்கத்தக்க சிறப்புடை யவர் ஆகிவிடுவார். இவ்வாறு திருவள்ளுவர்