9. இருளில் ஒளி 8ரோப்பிய அறிஞர்கள் சிலர் விலங்கினங்களை வெறும் இயந்திரங்கள் என மதித்தார்கள். வேறு சிலர் மிருகங்கள் மகிழ்வதைக் காணுதல் இயலாது என்று தவறுதலாகக் கருதினர்கள். ஆயினும், விலங்குகள் நீர்வேட்கை உடையனவாக உள்ளவை குடித்தபின் மகிழ்ச்சியுறுவதை அவர் கண்டிலர் போலும் என்று சுவைட்சர் கூறினர். விலங்கு களை இனிய வகையில் மனிதர் நடத்தவேண்டும் என்று கருதுவதன் நோக்கம், மக்கள் பிறரிடம் தாம் இரங்கிய உள்ளத்தொடு பழகுதற்கு அது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற அளவில் நம்பிய தத்துவ ஞானிகளும் உண்டு. இவை போன்ற வற்றை எடுத்துக் காட்டி, மனிதர் ஒவ்வொருவரும் பிறரிடமும் சமூகத்தினிடமும் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை மாத்திரம் 8ரோப்பிய அற நூல்கள் எடுத்து விளக்குகின்றன என்றும், பிற உயிர்கள் எல்லாவற்றினிடமும் மனிதர் பழக வேண்டுவதைப்பற்றி அந்நூல்கள் அத்துணை வற்புறுத்தவில்லை என்றும் சுவைட்சர் விளக்கினர். 8ரோப்பியர்கள் இவ்வாறு எண்ணியிருப் பவும், பற்பல நூற்ருண்டுகட்கு முன்னரே, இந்தியரும் சீனரும் எவ்வுயிரினிடத்திலும் இரக்க உள்ளம் படைக்கவேண்டும் என்பதை வற் புறுத்தியுள்ளவாற்றை விளங்க எடுத்துரைத்தார் சுவைட்சர். உலகத்தில் உள்ள உயிர்ப்பொருள்கள்
பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/92
தோற்றம்