உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளில் ஒளி 91 கருத்தும் உண்டு என்பது அறியப்படும். இவ் வாறே என்னைச் சுற்றி உள்ள எல்லாப் பொருள் களும் இன்பத்தை நாடுகின்றன, துன்பத்தை வெறுக்கின்றன என்பதை நான் அறிந்துகொள் வேன் ஆளுல், உண்மையை உணர்ந்தவன் ஆவேன் என்று சுவைட்சர் கருதினர். இவ்வெண் ணங்களை வெளிப்படையாகச் சொல்லக் கூடிய உயிர்ப்பொருள்கள் சில இருக்கலாம்; இவற்றை வெளிப்படையாகச் சொல்ல மாட்டாத வாயில்லாப் பூச்சிகளாகப் பல இருக்கலாம். நான் வாழ வேண்டும் என்ற எண்ணத்திற்காக என்னைப் பொறுத்தவரையில் எவ்வளவு மதிப்புத் தரு கிறேனே, அவ்வளவு மதிப்பு தாமும் வாழவேண்டும் என்று நினைக்கின்ற பிற உயிர்களிடத்து நான் வைக்கவேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இதனுல் விளங்குவது என்ன எனின், ஒருவர் உயிர்ப்பொருள்களைக் காப்பது நல்லது என்பதும், உயிர்ப்பொருள்களை அழிப்பது கெட்டது என்பதும் ஆம். ஒருவர் உண்மையில் அறவாளராக இருக்கின்ருர் என்ருல், அவர் உயிர்ப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் உதவி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவராய் இருப்பார் ; வாழும் உயிர் எதற்கும் துயர்தருதலைக் கூசுபவ ராக இருப்பார். அவர் எந்த அளவு இவ்வுயிர் நம் இரக்கத்தைப் பெறத்தக்கது என்று கேட்டல் பொருந்தாது. எந்த உயிரும் சிறந்த உயிர் என் பது அவர் உள்ளத்தில் அமைதல் வேண்டும். மரத் திலிருந்து இலையைக் கிள்ளவோ, பூவைப் பறிக் 4450–7 -