பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

99

முகம் திடீரென்று அழுவதைக் கண்டதும், என் னையும் அடிச்சிட்டு; உன் பிள்ளை மண்டையை யும் பிளந்துட்டு இப்ப நீளதுக்கண்ணே உட்கார்ந்து அழறே? புள்ளைக்கு ஒண்னும் ஆகாது. தைரி யமா வீட்டுக்குப் போ...? என்றான் ராமன்.

- உடனே ஆறுமுகம், நான் ரொம்பப் பாவிடா ராமா. வீட்டிலே தனியா இருக்க முடியல்லே. மனசைப் போட்டு உருட்டுது.

இந்தா, இந்த ரூபாயை வாங்கிக்கோ. முதல்லே பொன்னியோடு கொலுசை மீட்டி வாங் கிட்டு வந்துரு. அப்பத்தான் என் மவ கண்ணம்மா பொழப்பா...?? என்றான்.

‘என்னண்ணே இது இதுக்காகவா வந்தே| அதையெல்லாம் பிறவு பார்த்துக்கலாம். மனசைத் தைரியமா .ெ வ ச் சு க் .ே கா. கண்ணம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது.” -

இருந்தாலும் புள்ள யப் போய் பார்க்கனும் போலே இருக்குடா ராமா. வைத்தியாய்யா கூடக் கையை விரிச்சிட்டாராமே. எனக்கு என்னமோ மனசே சமாதானமில்லே.”

ஆகா! இந்த நெனப்பெல்லாம், குடிக்கப் போறதுக்கு முன்னே இருக்கணும். இப்ப அமுது என்ன பிரயோசனம்? எனக்கும் சேர்த்துத்தான் சொல்லறேன்.