பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

103

ஆயுசுக்கும் குடிக்க மாட்டேன். இப்ப உன் முன்னாலேயும் சத்தியம் பண்றேன்.

போதும். இதபோலெ நூறு சத்தியத்தைப் பொழுது விடிஞ்சதும் கேட்டுக் கேட்டுக் காது புளிச்சுப் போச்சு. நீ குடிச்சாலும் என்புருஷனை கூட இழுத்துட்டுப் போகமே இருந்தாப் போதும்.”

'நீ என்னை நம்பாட்டிப் பரவாயில்லே பொன்னி; என் பூவாயி என்னை நம்புவா; எனக்கு உடனே அவுங்கெளயெல்லாம் பார்க் கணும் போலெ இருக்கு; போகலாமா பொன்னி?? என்று ஆறுமுகம் கேட்டான். -

உடனே பொன்னி, ஊஹாம், நீ ஆசுபத்திரிப் பக்கமே தலை வெச்சுப் படுக்கப்படாதுன்னு எஜமான் கண்டிப்பா சொல்லியிருக்காரு. நீ போனா, ஐயா இத்தனை கஷ்டப்பட்டதும் வீணாப் போறதுமில்லாமே-கேஸே வேறோரு தினுசா மாறிடுமாம். என்றாள்.

இதைக் கேட்டதும் ஆறுமுகம் ஒன்றும் புரி யாமல் என்ன பொன்னி-கேளி-கிளின்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசறேன்னு ஆச்சர்யத் துடன் கேட்டான். - -

'நானா ஒண்னும் சொல்லல்லே. அங்கே நடந்ததைதான் சொல்லறேன்.”