பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

இந்த தார்மீகக் கவலையில் உலகம் முழுதிற்கும் பங்குஉண்டு

விளம்பரம் என்பது ஒரு பொருளின் விற் பனைக்காகச் செய்யப்படுவதுண்டு. ஆனால் ஒரு பொருள் விற்பனை யாகாமலிருப்பதற்காக விளம்பரம் செய்யப்படுவதைப் பற்றிக் கேள்விப் பட்டதுண்டா?

இப்போது அமெரிக்காவில்ே இந்தப் புதுமை நடக்கிறது. அங்கு இளைஞர்கள் போதை மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்

காக, விளம்பரத்துறை இவ்வாறு முடுக்கி விடப் பட்டுள்ளது.

150 கோடி டாலர்கள்

இருநூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர நிறுவ னங்கள் இப்பணியில் ஒத்துழைக்க இணங்கி யுள்ளன; போதை மருந்துகளுக்கு எதிரான விளம் பரங்களுக்காகப் பத்திரிகைகளில் இடம் ஒதுக் கித் தரவும், தொலைக் காட்சி, வானொலி போன்றவற்றில் நேரம் ஒதுக்கித் தரவும் அவை சம்மதித்துள்ளன. இவ்வாறு நன்கொடையாகச் செய்து தரப்படும் விளம்பரங்களின் மதிப்பு, அடுத்த மூன்றாண்டு காலத்திற்குள், 150 கோடி டாலர்கள் அளவை எட்டக்கூடும் என்று கணக்

கிடப்படுகிறது.